கற்றலை தூண்டும் கருத்தரங்கு.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் மாணவர்களின் கற்றலைத் தூண்டும் வகையிலான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றது.
இதன்போது, வைத்திய நிபுணர்கள், பேராசிரியர் உள்ளிட்ட குழுவினர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு தமது அனுபவங்களை மாணவர்களிடத்தில் பகிர்ந்து கொண்டனர்.
புத்திசாலித்தனமாக கற்றல், ஞாபகப்படுத்திக் கொள்ளல், இலக்கினை அடைதல், இலட்சியத்தினை அடைவதில் உள்ள சிரமங்கள் அவற்றினை கடந்து செல்வதற்கான வழிமுறைகள், சமூக ஈடுபாடு, கற்றதை சமூகத்தில் செயற்படுத்தல், உதவிசெய்யும் மனப்பாங்கு, அறிநெறிகளை கடைப்பிடித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், மாணவர்களால் கூறப்பட்ட பல்வேறு கருத்துக்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் 10 வருடங்களின் பின்னர் மாணவர்கள் ஒவ்வொருவரும் எந்நிலையை அடைவர் என்பது தொடர்பிலும் கேட்டறியப்பட்டது.
மகிழடித்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.தவனேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை, கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment