17 Nov 2019

கொண்டாட்டங்களில் சூழலுக்கும் இயற்கைக்கும் மாசு ஏற்படும் பட்டாசு வெடிப்பைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் ஏறாவூரில் வெற்றிப் பதாதை

SHARE
கொண்டாட்டங்களில் சூழலுக்கும் இயற்கைக்கும் மாசு ஏற்படும் பட்டாசு வெடிப்பைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் ஏறாவூரில்  வெற்றிப் பதாதை.

இலங்கையின் எட்டாவது  ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ‪   தெரிவாகியுள்ளமையை அடுத்து ஏறாவூர் நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என்.எம். முஹம்மத் சுஐப் தலைமையில் வெற்றி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்pடக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் புன்னைக்குடா வீதி மணிக்கூட்டுக் கோபுர வளைவில் புதிய எட்டாவதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது அரசுத் தலைவருமான கோட்டபாய ராஜபக்ஷ. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களின் படங்களைத் தாங்கிய பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.

இயற்கைக்கும் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் முகமாக தாங்கள் பட்;பட்டாசு கொளுத்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து விடுமாறு ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என்.எம். முஹம்மத் சுஐப் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: