எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கான சகல விதமான ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தி.
பொலிஸ்பாதுகாப்புடன்வாக்குபெட்டிகள்இன்றுகாலைஅனுப்பிவைக்கப்படவுள்ளன மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் உதயகுமார் தகவல்
இலங்கை சோசலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கான சகல விதமான ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்ப்பட்டுள்ளதாகவும் இதன்படி 428வாக்கெடுப்பு நிலையங்களுக்கு பொலிஸ்பாதுகாப்புடன்வாக்குபெட்டிகள்இன்றுகாலைஅனுப்பிவைக்கப்படவுள்ள தாகவும் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
இந்தமாவட்டத்தில் மட்டக்களப்புதேர்தல் தொகுதியில் 187682பேரும் கல்குடாதொகுதியில் 115974பேரும் பட்டிருப்புத் தொகுதியில் 94645பேருமாக398301வாக்காளர்கள் இந்த ஜனாத்பதித்தேர்தலில் வாக்களிக்கதகுதிபெற்றிருப்பதாகவும் இந்ததேர்தலுக்காக4991அரசஉத்தியோகத ;தர்களும் தேர்தல் கடமையில்;பாதுகாப்பு கடமைகளுக்காக 1688 பொலீஸ் உத்தியோகத்தர்கள்320சிவில்பாதுகாப்புஇணைப்பட்டுள்;ளனர்.,12ஆண்பெண்வாக்களிப்புநிலையங்கள்உட்பட428வாக்களிப்புநிலையங்கள்ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அரசஊடகப்பிரிவுதகவல் தெரிவிக்கின்றது.
மட்டக்களப்புமாவட்டத்தில்வாக்களிக்கதகுதியானமொத்தவாக்காளர்களும்.நீதியானதும் நேர்மையானதும் சுதந்திரமானதுமான வாக்களிப்பதற்கு ஏதுவான சகல ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும்அத்தோடுவயோதிபர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்களும் வாக்களிக்க தேவையான சகல வசதிகளும் வாக்கெடுப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களும் கணக்கெடுப்பு நிலையங்களுக்காக பாதுகாப்பு கடமைக்கு இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.இதனை தவிர ரோந்துப்பணியில் விசேட பொலீஸ் பிரிவினர் பங்கெடுக்கவுள்ளனர்.
இன்று 15ம் திகதி வாக்குப்பெட்டிகள் கையளிப்பதற்கு என 54 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமைக்கு இணைக்கப்பட்டு ள்ளனர். அதனை தவிர வலயங்களுக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளனர்.
தேர்தல் பணியினை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு குழுவின் சர்வதேச உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் தங்களது கண்காணிப்பு பணியினை ஏற் கெனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர்தெரிவித்தார்.இதுவரை 53 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் 35 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் 18 முறைப்பாடுகளுக்குரிய தீர்வு பெற்று கொடுப்பதற்கானநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகவும்இதில்ஆறுமுறைப்பாடுகள் வன்முறைகளாகவும் 47 முறைப்பாடுகள் தேர்தல் விதி மீறுதல்களாகவும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment