7 Nov 2019

கோட்டாபாய ராஜபக்சவின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது – அருண் தம்பிமுத்து.

SHARE
கோட்டாபாய ராஜபக்சவின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது – அருண் தம்பிமுத்து.
நாட்டில்  எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 7 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டபாய ராஜபக்ஸவின் வெற்றியை நாட்டிலுள்ள மக்கள் உறுதி செய்துள்ளனர். இதனை யாராலும் தடுக்க முடியாது. தேர்தலுக்குரிய நாட்கள் அண்மிக்க, அண்மிக்க கோட்டபா ராஜபக்சவின் வெற்றியைக் கண்டு ஏனைய வேட்பாளர்கள் அஞ்சுகின்றார்கள். என மக்கள் முன்னேற்றக் கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். 

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் களநிலவரங்கள் தொடர்பில் வியாழக்கிழமை (07) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்….

சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவருக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டிருந்தது. அதுபோல் தற்போது சஜித் பிரேமதாஸவுக்கு அதரவு தெரிவிப்பதாக கூறியிருக்கின்றார்கள். யுத்தத்திற்கு கட்டளையிட்டவர்தான் சரத் பொன்சேகா மாறாக அப்போது யுத்ததிற்கு கட்டளையிட்டவர் கோட்டபாய ராஜபக்ஸ அல்ல. சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கி கிழக்கை முஸ்லிங்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முனைகின்றது. கருணா, பிள்ளையான், வியாழேந்திரன், நான் எல்லாம் துரோகி என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்கின்றது என்றால், தமிழ் மக்களின் காணிகளைப் பிடிக்கும், அலிசாகிர் மௌலானா, அமீரலி, போன்றவர்களை என்ன சொல்லப் போகின்றார்கள். 

எனவே பொரும்பான்மை மக்கள் அடுத்த ஜனாதிபதியாக கோட்பாய ராஜபக்சவை தீர்மானித்துள்ள இந்நிலையில் வடக்கு கிழக்கிலும் அவருக்கு கணிசமாக வாக்குகளைப் பெற்று அவர் எடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவுள்ளார். அவ்வாறு கோட்பாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதியாக வரும் இடத்து நாங்கள் வேவையான பதவிகளையும், பெற்று  நாங்கள் நினைக்கும் அனைத்து அபிவிருத்திகளையும், மேற்கொள்ள முடியும். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: