25 Nov 2019

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு போக்குவரத்துக்கு ஏற்பாடுகளும் கற்றல் உபகரணங்களும் போஷாக்குப் பொதிகளும் வழங்கி வைப்பு.

SHARE
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு போக்குவரத்துக்கு ஏற்பாடுகளும்  கற்றல் உபகரணங்களும் போஷாக்குப் பொதிகளும்  வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வகைப்பட்ட உளநலன் சார்ந்த பாதிப்புக்களுக்குள்ளாகியவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக உதவு ஊக்கப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரி மஹ்புன் நிஸா றியாஸ் தெரிவித்தார்.

சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை 24.11.2019  இடம்பெற்ற இந்த உதவு ஊக்க நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட உள நல வைத்திய நிபுணர் ரீ. கடம்பநாதன் (ளுநnழைச Pளலஉhயைவசளைவ ஊழளெரடவயவெ)  மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், உளநல வைத்தியர்கள், சிறுவர் நன் நடத்தைப் பிரிவு அலுவலர்கள்,  பயனாளிக் குடும்பங்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். ‪‬

பல்வேறு வகையில் பின்தங்கிய நிலைமையில் பாதிக்கப்பட்டவர்களை கள விஜயத்தின்போது இனங்கண்டு தேர்ந்தெடுத்ததன் அடிப்படையில் சுமார் 62 ஆண், பெண் மாணவர்களுக்கு சைக்கிள்களும், பாடசாலை உபகரணங்களும் போஷாக்குப் பொதிகளும்  என இவ்விதம் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரி மஹ்புன் நிஸா தெரிவித்தார்.

யுனிசெப் நிறுவனத்தினால் உதவியளிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தலா ஒரு மாணவருக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

SHARE

Author: verified_user

0 Comments: