கொல்லநுலைப் பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களுக்கு திங்கட்கிழமை (25) முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டது.
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைவாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இப்பயிற்சி வழங்கப்பட்டது.
குறித்த முதலுதவிப் பயிற்சியில் சிறுவர்கழகத்தில் அங்கத்துவம் பெறும் மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றிருந்தனர்.
அவசர நிலைமையின் பொருட்டு வைத்தியசாலைக்கு அனுமதிக்க முன்பு வழங்கப்படும் உயிர்காக்கும் முதலுதவி பயிற்சிகள் தொடர்பில் செய்முறை ரீதியாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
இதன்போது, சிறுவர் பாதுகாப்பு குழுவிற்கு காகிதாதிகளும், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வளவாளராக இலங்;கை செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவிப் பயிற்றுவிப்பாளர் ஆ.சோமசுந்தரம் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார், மண்முனை தென்மேற்கு பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஜி.அருணன், வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம.புவிதரன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வ.குகராஜ், கிராமசேவை உத்தியோகத்தர் க.சுவேந்திரன் ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment