சஜித் பிரேமதாஸவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று சனிக்கிழமை (09) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது முக்கியமான சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், எழுத்து மூலமான கோரிக்கையும் கையளிக்கப்பட்டது.
கோரிக்கைகள்.
01. தேசிய பிரச்சனைக்குரிய நிரந்தரமான தீர்வு.
02. கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை முழுமையாக்குதல்.
03. தொழிற்சாலை அமைத்தல்.
04. பாலங்களை அமைத்தல்.
05. வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவாகத் தொழில்வாய்ப்புகளை வழங்குதல் இதன்போது உள்வாரிப் பட்டதாரி, வெளிவாரிப் பட்டதாரி, வெளிநாட்டுப் பட்டதாரி, ர்Nனுயு பட்டதாரி என்ற பேதங்கள் பார்க்காமல் தொழில் வழங்குதல்.
06. கிரான்புல் அணைக்கட்டினை நிருமாணித்தல்.
07. அரச ஊடகத்துறையில் தமிழர்களுக்கான வாய்ப்புகள், பதவியுயர்வுகளின் போது பாரபட்சம் காட்டாமையை உறுதிப்படுத்தல்
08. வீதிகளை புனரமைத்தல்.
09. விவசாயத்துறை நீர்ப்பாசனத்துறை என்பவற்றை மேம்படுத்தல்.
10. மேய்ச்சல் தரைகளைப் பிரகடனப்படுத்தல்.
போன்ற விடயங்கள் கோரப்பட்டிருந்தன. இவ் விடயங்களைச் சாதகமாக கையாளவுள்ளதாக அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ அவர்கள் குறிப்பிட்டார். தனது வெற்றியின் பின்னர் ஆக்கபூர்வமான பல நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பாரபட்சம் பக்கச்சார்பு இல்லாமல் சகல மக்களுக்கும் சம வாய்ப்புகள், சமத்துவங்களை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி வேட்பாளர் ஏற்றுக்கொண்டார்.
0 Comments:
Post a Comment