மட்டக்களப்பு மாவட்ட செயலக நிர்வாகத்தின் கீழ்வருகின்ற பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான தேசிய பெறுகை ஆணைக்குழுவின் நடைமுறைகளை காலத்திற்கு காலம் சில மாற்றங்களுடன் செயற்படுத்தல் வேண்டிய தேவை அரசாங்க திணைக்களங்களுக்கு உண்டு. அந்த வகையிலே இன்று மட்டக்களப்பு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் 9.30மணியளவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.பெறுகை நடைமுறை என்பது பொருட்கள் சேவைகள் ஆலோசனைகள் பின்ணணிகள் அதிகாரங்கள் வழிகாட்டல்கள் என்பவற்றை கொண்டுதான் அரசாங்க பெறுகை நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும் என்பது அரசாங்க கூட்டுத்தாபண திணைக்களங்களின் விதியாகும்
பெறுகை நடைமுறைக்கான ஆளுமை மேம்பாட்டுத்திட்டமாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக முன்னெடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
தேசிய பெறுகை ஆணைக்குழுவின் ஆளுமைவிருத்தி மேம்பாட்டு திட்டப்பயிற்ச்சி; கருத்தரங்கிற்கு தேசிய ஆணைக்குழுவின் னு.ஊதிஸ்ஷாநாயக்க மேலதிக செயலாளர்நாயகம் மற்றும் ஆ.வாமதேவன் ஆணைக்குழுவின் உறுப்பினர் று.னு nஐயசிங்க செயலாளர் நாயகம் தேசிய பெறுகை ஆணைக்குழு அத்தோடு பொறியலாளர் மகிந்தன் பணிப்பாளர் புலநாய்வு பணிப்பாளர் ஆளுமைவிருத்தி யு.னு.P.ஐ பிரசன்ன ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கி இருந்தனர்.
இவ்வாறான ஆளுமை விருத்தி செயல் அமர்வுகளை காலத்திற்கு காலம் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கும் குறைபாடுகளுக்குமான திருத்தங்களுடன் ஆணைகுழுவினால் அரச திணைக்கள கூட்டுத்தாபன நிதி சபைகளுக்கும் பயிற்சிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆளுமை மேம்பாட்டு திட்டத்திற்காக மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் அது போன்று பிரதேச செயலாளர்கள் பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் க.nஐகதீஸ்வரன் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் எ.நவேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment