18 Nov 2019

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு

SHARE
மட்டக்களப்புஇருதயபுரம் பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (17.11.2019) இரவு மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார்தெரிவித்தனர்.
இருதயபுரம்10 ஆம் குறுக்கு வீதியிலுள்ள வெற்றுக்காணியில்; சிறுவர்கள் பந்து விளையாட்டில்ஈடுபட்டிருந்தபோது அருகிலுள்ள பாழடைந்த வெற்றுக்காணிக்குள் பந்து வீழ்pந்துள்ளது.வீழ்ந்தபந்தை எடுக்க அங்கு சென்ற சிறுவர்கள் பந்தை தேடும்போது பந்து வடிவிலான குண்டு ஒன்றைக் கண்டுஅதனை எடுத்துக் கொண்டு சென்று வீட்டிலுள்ள பெற்றோரிடம் காட்டியுள்ளனர்.

அதனைக்கண்ட பெற்றோர் சிறுவனிடம்  இருந்து அந்த கைக்குண்டைப்சடுதியாகக் கைப்பற்றி வெற்றுக் காணியில் வீசிய பின்னர்அந்தக்குண்டு தொடர்பாக இரவு 7 மணியளவில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து  அங்கு சென்ற பொலிசார் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.;இதுதொடர்பான மேலதிக விசாரணையினை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர். 
SHARE

Author: verified_user

0 Comments: