மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் திட்டமீழாய்வு கூட்டம் இன்று (2) காலை மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க
அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட செயலக பிரத மகணக்காளர் க.ஜேகதீஸ்வரன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் புண்ணியமூர்த்தி சசிகலா, மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், கணக்காளர் பிறேம்குமார், உதவி மாவட்ட செயலாளர் எ.நவேஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

.
எதிர்காலத்தில் எதிர் கொள்;ளவுள்ள பருவகால மழைமற்றும் தேர்தல் அத்தோடு ஆண்டின் இறுதி மாதத்தில் நிற்பதனால் அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்தி முடிப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கும் படி வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது.
வீதி புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்திசெய்து முடிக்கும்படியும் மற்றும் ஏனைய விசேட வேலைத்திட்டங்களான கம்பரளிய மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் மூலமாக ஓதுக்கிடுசெய்யப்பட்ட நிதியினை இவ்வாண்டுக்குள் முடிக்கப்படல் வேண்டும் எனவும். சகல உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இச் செயல்த்திட்டங்களையும் துரிதப்படுத்துமாறு அரசாங்க அதிபர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
0 Comments:
Post a Comment