மாற்றுத் திறனாளிகளூடாக நல்லிணக்கத்தைக் கட்டிழுப்புதல். எனும் தொணிப் பொருளின் கீழ் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு வியாழக்கிமை (21) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையில் நடைபெற்றது.செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்த்தினர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சமமேளனத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கமீட் அமைப்பின் பணிப்பாளர் க.காண்டீபன் வளவாளராகக் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளூடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பான கருத்துக்களை வழங்கினார்.
0 Comments:
Post a Comment