மட்டக்களப்பு மாவட்டம் கடந்த நான்கரை வருடகாலமாக அபிவிருத்தியில் பின்தங்கியிருக்கின்றது – பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார்.
எனவே எமது கட்சியின் தலமைச் செயலகம் மட்டக்களப்பு இருதயபுரத்தில் அமைந்துள்ள மக்கள் எமது தலைமைச் செயலகத்தில் தங்களது கோரிக்கைளை முன்வைக்கலாம். அவ்வாறு முன்வைக்கப்படும் வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
என சிறிலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸ வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (18) காலை களுதாவளையில் அமைந்துள்ள அவரைது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
நடைபெற்று முடிந்த ஜனாதித் தேர்தலின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சில கட்சிகள் இனவாதம் கதைத்ததனால்தான் எமது கட்சிக்கு இம்மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு வாக்குகள் கிடைத்திருக்கவில்லை. மாறாக எமது பொது ஜன பெரமுனக் கட்சி ஒரு இனவாதக் கட்சியல்லை அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற கட்சியாகும். இருந்த போதிலும் எமது வேட்பாளர் அமோக வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல அபிவிருத்திகளும் நடைபெறும். இனவிகிதாசார அடிப்படையில் சகலருக்கும் அபிவிருத்திகளைப் பகிர்ந்தளிப்போம். இதுபோன்று இம்மாவட்டத்தில் எமது கட்சி அமோக வெற்றிபெறும்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சியினால் முன்னிறுத்தி தற்போது ஜனாதிதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு வாக்களித்த அனைத்து மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் பொதுஜன பெரமுனக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இதுபோன்று எதிர்வருகின்றற தேர்தல்களில் எமது மாவட்ட மக்கள் எமது கட்சியின் மீது நம்பிக்கை கொண்டு மாவட்டத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment