இந்த நாட்டின் 07வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டதையொட்டியும், ஜனாதிபதியாக கடமையேற்றதை முன்னிட்டும் மக்கள் தொடர்ந்து தமது மகிழ்ச்சிகளை தெரிவித்துவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடுசெய்துவருகின்றது.
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இந்த நாட்டின் 07வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டதையொட்டியும் நேற்று(19)காலை ஜனாதிபதியாக கடமையேற்றதை முன்னிட்டும் பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம் நடாத்தப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் கோட்டைக்கல்லாறு உறுப்பினர் த.சுதாகரனின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நேற்று(19) பிற்பகல் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டு புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துடன் குளிர்பானங்கள் வழங்கியும் தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment