1 Nov 2019

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 780 ஏக்கர் விவசாய நிலங்;கள் பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 780 ஏக்கர் விவசாய நிலங்;கள் பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதை விவசாயிகள் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரிடம் முறையிட்டதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை (01)  பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிடுவதற்காக அனர்த்த நிவாரண நிலைய உதவிப்பணிப்பாளர் ஏ.எம.எஸ்.சியாத் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண நிலைய உத்தியோகத்தர்கள் குழு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக எருமத்தீவு பகுதியில் 780 ஏக்கர் நிலம் முற்றாக நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது மொத்தம் 900 ஏக்கர்கள் விவசாயம் செய்யப்பட்டிருந்தது அதில் 780 ஏக்கர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக விவசாயிகள் கூறினர்.

பாதிப்பிற்கு உள்ளாகிய விவசாயிகள் விதைப்பு செய்து 17 நாட்கள் பயிரான நிலையில் தொடர்மழை காரணமாக நீரில் மூழ்கிய நிலையில் உள்ளது.

அரசாங்கத்தினால் ஆறு பயிர்களுக்கான இலவச காப்புறுதி திட்டம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் அழிவடைந்த பயிர் நிலங்களுக்கான மதீப்பிட்டு அறிக்கையினை பெற்று விவசாய காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: