12 Nov 2019

கந்தசஸ்டிட்டி விரம் அனுஸ்ட்டித்தவர்களுக்கு சூரன்போர் முடிந்துவிட்டது. ஆனால் இலங்கை மக்களுக்கு எதிர்வரம் 16 ஆம் திகதிதான் சூரன்போர் நடைபெறப்போகின்றது – சுதர்சனன்.

SHARE
கந்தசஸ்டிட்டி விரம் அனுஸ்ட்டித்தவர்களுக்கு சூரன்போர் முடிந்துவிட்டது.  ஆனால் இலங்கை மக்களுக்கு எதிர்வரம் 16 ஆம் திகதிதான் சூரன்போர் நடைபெறப்போகின்றது – சுதர்சனன்.
தமிழ் மக்கள் வருடாந்தம் அனுஸ்ட்டிக்கும் கந்தசஸ்ட்டி விரத்தின் இறுதிநாள் அண்மையில் நடைபெற்றிருந்தது. அந்த நாள் சூரன்போர் நடைபெற்ற நாளாகும். ஆனால் கந்தசஸ்டிட்டி விரதம். அனுஸ்ட்டித்தவர்களுக்கு சூரன்போர் முடிந்துவிட்டது.  ஆனால் இலங்கை மக்களுக்கு எதிர்வரம் 16 ஆம் திகதிதான் சூரன்போர் நடைபெறப் போகின்றது. 


என பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர் சி.சுதர்சனன் தெரிவித்துள்ளார். கிராங்குளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் காரியாலயம் ஒன்று திங்கட்கிழமை (11) காலை  திறந்து வைக்கப்பட்டது. 


ஐக்கிய தேசியக் கட்சியின் மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் த.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மங்கள செனரத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது சுதர்சனன் மேலும் தெரிவிக்கையில்….


இலங்கை மக்கள் எதிர்வரும் 16 ஆம் திகதிதாக் சூரனை வெல்லப்போகின்றோம். இலங்கையின் சூரனாக உள்ள கோட்டபாய ராஜபக்ஸவை தோற்கடித்து எமது வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அவர்களை இலங்கை மக்களாகிய நாங்கள் வெல்ல வைக்கப் போகின்றோம். அதற்காக இலங்கை மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்வரும் 16 ஆம் திகதி அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.


வடக்கு கிழக்கு உட்பட முழு இலங்கை நாட்டையும் அந்த ராஜபக்ஸ குடும்பம் எவ்வாறு அடக்கி ஆட்டது என்பதை நாங்கள் அனைவரும் நன்கு அறிவோம். அந்த அடக்குமுறை ஆட்சி வருவதற்கு நாங்கள் யாரும் துணை போகக்கூடாது. அந்த அராஜக ஆட்சியயை மீண்டும் எமது நாட்டில் கொண்டு வந்தால் எமது நாட்டு மக்கள் சுதந்திரமாதக வாழ முடியாது. குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் நிம்மதியாக உறங்க முடியாத நிலமை மீண்டும் ஏற்பட்டு விடும். எனவே இலங்கயின் சூரனாக உள்ள கோட்டபாய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பி விட்டு மக்கள் சேவகனாகத்திகழும் இலங்கை நாடு விரம்பும் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ  அவர்களை எமது நாட்டின் 8 வது ஜனாதிபதியாக தெரிவு செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: