ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயம் வாரலாற்றுச் சாதனை.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஸ்ற்றப் பிரதேசமான ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயத்திலிருந்து இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 15 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று அப்பரீட்சையில் 100 வீத சித்திபெற்றுள்ளதாக அவ்வித்தியாலய அதிபர் க.ஜெயகரன் தெரிவத்துள்ளார்.
அதில் 08 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறத் தகுதி பெற்றுள்ளார்கள் பிரத்தியேக வகுப்புக்கள் எதுவுமின்றி இச்சாதனை மிகவும் அதிகஸ்ரப் பிரதேச பாடசாலையில் நிகழ்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும் இச்சாதனைக்கு உறுதுணையாக திகழ்ந்த தரம் 01,02 கற்பித்த ஆசிரியை திருமதி சறோசாதேவி பிரியநாயகம் மற்றும் தனது பிள்ளைகள் போன்று தனது முழுநேரத்தினையும் பிள்ளைகளோடு செலவிட்டு இந்த வலலாற்றுச் சாதனையின் காதாநாயகி தரம் 03, 04, 05, வரையிலும் கற்பித்த வைத்தியலிங்கம் கங்காதேவி ஆசிரியை அவர்களையும் தலைவணங்கி இந்த சாதனைக்கு உறுதுணையாக விளங்கிய ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயத்தின் ஆசிரியர் குழாத்திற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment