இராணுவமயப்படுத்தப்பட்ட எதேச்சத்திகாரத்தை நோக்கி தமிழ் மக்கள் விரும்பவில்லை - சிறிநேசன் எம்.பி.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சரியானது எது பிழையானது எது என்று தெரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் கடந்தகாலப் படிப்பினைகள் அவர்களிடத்தில் உள்ளது. கடந்தகாலத்தில்கூட மகிந்தயா, மைதிரியா என்கின்றபோது, தமிழ் மக்கள் மைத்திரிபக்கம் சார்ந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மக்களின் நாடித்துடிப்பை எடுத்துப்பார்க்கும்போது, அவர்கள் ஒரு ஜனநாயக யுகத்தை நோக்கிச் செல்வதற்கு விரும்புகின்றார்கள். இராணுவமயப்படுத்தப்பட்ட எதேச்சத்திகாரத்தை நோக்கி தமிழ் மக்கள் விரும்பவில்லை. எப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உண்மையில் ஜனநாயக அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு கட்சி என்கிற்ன அடிப்படையில், தமிழ் மக்களை இராணுவ மயப்படுத்தப்பட்ட எதேச்சதிகாரத்திற்கு விரும்பமாட்டார்கள். எனவே மக்களுக்கு ஒரு தெழிவு இருக்கின்றது நாங்கள் ஒரு மோசமான ஒரு யுகத்தை நோக்கிச் செல்லக்கூடாது என்பது தொடர்பில்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியாலர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
இந்த விடையத்தில் எமது மக்களுடன் நாங்கள் கலந்துரையாடுகின்றபோது எமது மக்கள் ஒரு தெழிவான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். சாராயப்போத்தல்களை அல்லது நாட்கூலிக்கு 1000 ரூபாய் கொடுத்து ஒரு மயக்கமான சூழ்நிலையை வைத்துக் கொண்டு எதேச்சத்திகாரத்தைக் கொண்டுவருவதற்கு சில சுயநல அரசியல்வாதிகள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். எனினும் அவ்வாறான சுயநல வாதிகளின் வலையில் தமிழ் மக்க்ள விழுந்துவிடமாட்டார்கள்.
காணாமலாக்கப்ட்டவர்களின் கொதிப்பு, அல்லது அவர்களது பரிதாப நிலை, அவர்களின் கவலை என்பன தமிழ் மக்கள் எல்லேரிடதிலும் பகிரப்பட்டிருக்கின்றன. இதனையும் அவர்களைத் தவிர்த்துச் சிந்திப்பவர்களாயிருந்தால் அவர்கள் உண்மையில் தமிழ் தாய்க்குரிய பிள்ளைகளாயிருக்க வாய்ப்புக்கள் இல்லை.
எமது தலைமையுடன் நாம் பேசிக்கதைத்து, தீர்க்கமான ஒரு தீர்மானத்தை எடுத்ததன் பின்னர். நாங்கள் உரிய வேட்பார்களுடன் பேசிக் கதைத்து, முடிவுகளை எடுப்போம். அவ்வாறு முடிவுகளை எடுக்கின்றபோது உள்ளதில் நல்லது, உள்ளத்தால் நல்லது எது என்பதை நாங்கள் பார்த்துவிட்டு எமது மக்களுக்கு சில தெழிவு படுத்தல்களை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது.
எமது மக்கள் மிகவும் தெழிவானவர்கள் அவர்கள் பணத்திற்கான மானத்தை விற்கமாட்டார்கள். நியாயமா இலாபமான என்று வருகின்றபோது அவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்பார்கள். மோசடிக்காரர்கள் இலாபத்தின் பக்கம்தான் நிற்பார்கள். அவ்வாறானவர்கள் பணக்கட்டுக்களைத்தான் பார்ப்பார்கள் மக்களுடைய கஸ்ட்டங்களைப் பார்க்கமாட்டார்கள்.
உரிமையா? சலுகையா? என்று பார்க்கின்றபோது எமது மக்கள் உரிமையின் பக்கம்தான் நிற்பார்கள். வியாபாரமாக தமது அரசியலை ஊதாரித்தனமாக செய்கின்றவர்கள் சலுகையின் பக்கம் நிற்பார்கள். அவ்வாறானவர்கள், இன்றைக்கு ஒன்றும், நாளைக்கு வேறொன்றும் சொல்வார்கள். அவ்வாறானவர்களின் தேவைகள் அனைத்தும் தற்காலிக் சுயநலங்களே ஒளிய நீண்டகாலச் சிந்தனைகள் எதுவும் இருக்காது.
நோற்று ஒரு பேச்சுப் பேசியவர்கள் இன்று ஒருபேச்சிப் பேசுகின்றார்கள். தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பல விடையங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அன்று வெள்ளைவேனைப்பற்றி உரத்த குரலில் பேசியவர்கள் இன்று அர்வளுக்குச் சாதகமான முறையில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே மக்களின் தலையில் வைத்து மிளகு அரைப்பதற்கு எந்த ஒரு சுயநல வாதியும் நினைத்தால் அவர்கள் மக்களிடமிருந்த தூக்கி வீசப்பட்டு, அன்னியப்படுத்தப்படுவார்கள் என்பதுதான் உண்மை. அடிப்படைவாதிகளின் வாக்குகளால் அவர்கள் வென்றுவிட்டால். இவர்கள் விமோசனம் பெற்றுவிடலாம் என்று நினைக்க முடியாது. சிறுபான்மை மக்களின் சார்பாக தங்களைத் தலைவர்கள் என்று சொல்கின்ற சில எடுபிடிகளை மக்கள் அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகத்தான் பார்க்கின்றார்கள். எனவே எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்குரிய தெழிவு படுத்தலை மிக விரைவில் மேற்கொள்ளும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment