22 Oct 2019

மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர், யுவதிகளுக்கான இளைஞர் முகாமில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர், யுவதிகளுக்கான இளைஞர் முகாமில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (20) மாலை நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் “எதிர்பார்ப்பின் இளைஞர் முகாம்” என்ற தொனிப்பொருளில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்றன.

இதன்போது இளைஞர், யுவதிகளின் ஆளுமையினையும், மனப்பாங்கினையும் விருத்தி செய்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதேவேளை சனிக்கிழமை இரவு தீப்பாசறையும், இளைஞர், யுவதிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இறுதிநிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேச உதவிபிரதேச செயலாளர் கலந்துகொண்டிருந்தார். 





SHARE

Author: verified_user

0 Comments: