சர்வதேச முதியோர் வாரத்தினை முன்னிட்டு முதியோர் கலை விழா.
சர்வதேச முதியோர் வார விழா மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை அலுசலகமும்,கிழக்கு மாகாண முதியோருக்கான தேசிய செயலகமும் இணைந்து நடாத்தும் சர்வதேச முதியோர் விழா எதிர்வரும் திங்கட் கிழமை 07.10.2019 ஆந் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு களுவாஞ்சிகுடி நந்தவனம் முதியோர் இல்ல மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த முதியோர் தின நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.இந் நிகழ்வினை பிரதேச முதியோர் சம்மேளனம் களுவாஞ்சிகுடி எஸ்.பேரின்பநாயகம் தலைமைதாங்கவுள்ளார். முதியோர் இசைக்குழுவினரின் காணமழை நிகழ்ச்சியினை இலங்கேஸ்வரன் நிகழ்த்தவுள்ளதும் சிறப்புக்குரிய விடயமாகும்.
அத்தோடு பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் முதியோர்களின் விசேட நிகழ்வுகளும் அத்தோடு வயது சமத்துவமான பயணம் எனும் கருப்பொருளிலான சொற்பொழிவும் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்;கான இந் நிகழ்வானது இம்முறை களுவாஞ்சிகுடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந் நிகழ்வில் மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ந.மதிவண்ணன்,பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பரியா வில்வரெத்தினம்,ஆகியோருடன் விசேட அதிதிகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
0 Comments:
Post a Comment