14 Oct 2019

வாழைச்சேனைக் கடதாசி ஆலையை மீள இயங்கச் செய்வதற்கு முன்னைய அரசாங்கம் முன்வரவில்லை – மங்கள செனரெத்.

SHARE
வாழைச்சேனைக் கடதாசி ஆலையை மீள இயங்கச் செய்வதற்கு முன்னைய அரசாங்கம் முன்வரவில்லை – மங்கள செனரெத்.
வாழைச்சேனைக் கடதாசி ஆலையை மீள இயங்கச் செய்வதற்கு முன்னைய அரசாங்கம் முன்வரவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவரும், முன்னாள் வாழைச்சேனை கடதாசி ஆலையின் தலைவருமான மங்கள செனரெத் தெரிவித்துள்ளதார்.

திங்கட்கிழமை (14) தும்பங்கேணியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

வாழைச்சேசை கடதாசித் தொழிற்சாலை ஒரு கட்டியnழுப்பக்கூடிய தொழிற்சாலையாக இருந்தும் அதனை அவர்கள் ஏன் மூடி வைத்துள்ளார்கள் என்பதைப் பற்றிச் சிந்தித்தேன். நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரிடத்தில் சென்று இந்த தொழிற்சாலையை மீண்டும் இயங்கச் செய்வது பற்றிக் கதைத்தேன் அது மீள இயங்கினால் 750 இங்கு மேற்பட்டோருக்கு அப்பகுதியில் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்பதையும் தெரிவித்தேன். அதனை அவர்கள் செய்யவில்லை. 

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் என்னை அழைத்து தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுடன் நன்றாக பழகுபவர் நீங்கள், தமிழ் கதைக்கக் கூடியவர் நீங்கள் என என்னிடம் தெரிவித்து, அந்த கடதாசி ஆலையைத் திறப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து தருகின்றோம் அதனைப் முன்னின்று செயற்படுத்துமாறு அவர் என்னிடம் கூறினார். பின்னர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் என்னை அழைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எனும் பதவியையும் தந்துள்ளார்கள். 

எனது இப்பதவியேற்பின் பின்னர் முதன் முதலாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பின்தங்கிய பிரதேசத்திற்கு விஜயம் செய்து முதலாவது கூட்டத்தில் கலந்து கொண்டதையிட்டு நான் சந்தோசமடைகின்றேன். இப்பகுதியில் அதிகளவு விசவசாயிகள் இருப்பதை நான் அவதானித்து வந்தேன். இந்த பட்டிருப்பு தேர்தல் தொகுதி மாத்திரமல்ல மட்டக்களப்பின் 2800 சதுரக்கிரோமீற்றர் பரப்பளவிற்கும் வேலை செய்வதற்கு எனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கின்றார்கள். எனக்கு இது பெரியவிடையம் அல்லை இம்மாவட்த்தின் மக்களின் விடையங்களைக் கவனிப்பதற்கு எனக்கு தேவையான சக்தி இருக்கின்றது. நான் தரையில் இருந்தும், இஸ்ட்டார் கொட்டலிலிருந்தும் சாப்பிடக்கூடியவன். 
இதற்கு முன்னர் கொழும்பிலிருந்து சிலர் வருவார்கள், இங்கு காரியாலயங்களைத் திறப்பார்கள், பின்னர் அந்தக் காரியாலயங்களை மூடிவிட்டுச் சென்றுவிடுவார்கள். அந்த நேரங்களில் மக்களுக்கு ஆசையூட்டும் கருத்துக்களையும் தெரிவித்துவிட்டுச் செல்வார்கள். தற்போது எமது கட்சியின் மாவட்டக் காரியாலயம் ஒன்றைத் தொடற்சியாக 6 வருடங்களுக்கு தந்துள்ளார்கள். பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் தேர்தல் முகாமையாளராக எஸ்.திருநாவுக்கரசு என்பவர் நியமிக்கப்படவுள்ளார். அவருடைய நியமனத்தின் பின்னர் இந்த தொகுதியிலுள்ள மக்கள் உங்களுடைய தேவைகள், பிரச்சனைகளை எழுதி அவரூடாக எனக்கு அனுப்பி வையுங்கள் அதனை நாங்கள் எந்தக் காரணம் கொண்டு குப்பைத் தொட்டியில் வீசமாட்டோம் அவற்றுக்கு உரிய அமைச்சுக்கள் ஊடாக ஒவ்வாரு புதன்கிழமையும், தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம். எமது மாவட்டக் காரியாலயத்தில் ஒருபகுதியில் தமிழ் மக்களுக்காகவும், இன்னுமொரு பகுதியில் முஸ்லிம் மக்களுக்காகவும், மற்றுமொரு பகுதியில் சிங்கள மக்களுக்காகவும் எமது உத்தியோகஸ்த்தர்க்ள கடமையிலீடுபடுவார்கள். மாவட்ட மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நேரடியாக அமைச்சர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். நான் எமது தலைவரிடம் இந்த விடையத்தை எடுத்துச் சொல்லியபோது… மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு சரியானதொரு தலைமைத்துவம் இல்லை, இதன்மூலமாக சரியானதொரு தலைமைத்துவத்தை ஏற்படுத்தி அங்குள்ள மக்களின் பிரச்சனைகளை உரிய அமைச்சுக்களுடன் தொடர்பு கொண்டு தீர்வு பெற்றுக் கொடுக்கவேண்டும் என அவர் என்னிடம் தெரிவித்தார். 

நான் யாருக்கும் கீழ் இருந்து செயற்படவில்லை, நேரடியாக கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ்த்தான் செயற்படுகின்றேன். இங்குள் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சனைகள் குறித்து நன்கு எனக்குத் தெரியும், நாம் நேரடியாக கட்சின் தலைதை;துவகத்தின் கீழ் இருப்பதனால் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பது முடியாத விடையம் அல்ல. இது ஒருபுறமிருக்க தற்போதைய ஜனாதிபத்தித் தேர்தல் காலத்தில் பல்வேறுபட்ட கட்சிகளிலிருந்தும், நாளுக்கு நாள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து வருகின்றார்கள். அவர்கள் அனைவரினதும் ஏகோபித்த வேண்டுகோளிற்கிணங்க ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நிறுத்தியுள்ளார்கள். அன்னம் என்பது வெற்றியின் சின்னம் என்பதால் அன்னத்தை சின்னமாக தேர்வு செய்துள்ளார்கள். என அவர் இதன்போது தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: