நீர் பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்.
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி நீர் வழங்கல் திட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நீர் கட்டணம் செலுத்தாதவர்களும் மற்றும் ஆயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட நிலுவைத்தொகையினை கொண்டிருப்பவர்களும் எதிர்வரும் 2019.10.24 ஆம் திகதிக்கு முன்னர் தமது நிலுவையினை செலுத்தி நீர் துண்டிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் நீர் பாவனையாளர்களை செவ்வாய்கிழமை (22) கேட்டுள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கையானது மட்டக்களப்பு பிராந்தியத்திலுள்ள ஏனைய நீர் வழங்கல் திட்டங்களிலும் இடம்பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிராந்திய முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment