கடந்த அமைச்சரவையில் வாய் திறக்கவே முடியவில்லை கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம்,
கடந்த அமைச்சரவையில் வாய் திறக்கவே முடியாதிருந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாவது பிரச்சார பொதுக்கூட்டம் ஏறாவூர் மீராகேணியில் சனிக்கிழமை 26.10.2016 இரவு இடம்பெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஹக்கீம், இந்த நல்லாட்சி அரசில் நடந்த நல்லவைகளை மறந்துவிட முடியாது, நான் கடந்த அமைச்சரவையிலும் அங்கம் வகித்த ஒரு அமைச்சர். ஆனால், அங்கு எங்களால் வாய் திறந்து, மனம் திறந்து எதுவுமே எதுவுமே சே முடிந்திருக்கவில்லை. அப்படி ஏதாவது பேச தயாரானால் எங்கள் மீது கடும் அதிகாரப் பாய்ச்சல்.
ஆனால் இந்த அரசில் அப்படியல்ல. நாங்கள் இந்த அமைச்சரவையில் எங்கள் உரிமைக்காக போராடிப் பேசக் கூடிய ஒரு பின்புலத்தை சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இதனை யாரும் மறந்து விடவோ மறுதலிக்கவோ முடியாது.
எனவேதான் எங்களுக்கு இந்த அரசாட்சிக் காலத்தில் இருக்கின்ற அற்ப சொற்ப நிம்மதியையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதா அல்லது இருப்பதையும் இழப்பதா என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
இடையிடையே நிம்மதி குலைந்து போனதுதான் மறுப்பதற்கில்லை.
அதேவேளை, இப்பொழுது இருக்கும் நிம்மதியைக் குழப்புவதற்காக தோல்வி நிச்சயம் என்று உறுதியாகிவிட்ட இனவாதத் தரப்பினர் அப்பாவி சிங்கள மக்களை உசுப்பேற்றுவதிலே ஈடுபட்டிருக்கின்றார்கள். அதுதான் இப்பொழுது சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசங்களிலே தேர்தல் களத்திலே இனவாதம்தான் இப்பொழுது உசுப்பேற்றப்படுகிறது.
அதன் ஒரு கட்டமாகவே அப்பாவியான என்னையும் சேர்த்து ஸஹ்ரானின் குண்டுவெடிப்போடு சம்பந்தம் என்று கதை கட்டி விடுகிறார்கள்.
அது சிங்கள மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடப்போவதிலவ்லை.
பாரளுமன்றில் மிகவும் மூத்த உறுப்பினர் ஒருவர் பண்பட்ட அரசியலவாதியாக இருக்கும்ஒருவரும் இனவாத உசுப்பேற்றலால் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால் சாதாரண அப்பாவி பாமர மக்களின் நிலை என்ன என்று விவரித்துக் கூறவேண்டியதில்லை.
சிறுபான்மை வாக்குகள் இனவாதிகளுக்கு இல்லை என்பதால் இனவாத உசுப்பேற்றல்தான் அவர்களது கைவசம் இருக்கும் தேர்தல் விஞ்ஞாபனமாக இருக்கின்றது.
ஆட்சி அதிகாரம் என்று வருக்pன்றபோது கடந்த காலங்களிலே நாங்கள் அனுபவித்த துயரங்கள் எங்களது அடுத்த சந்ததிக்கும் நீட்சியாகச் செல்லவிடாமல் இலங்கையர்கள் அனைவரும் இணைந்து இப்போழுதே இனவாதத்தை முறியடித்தாக வேண்டும்.
அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் அளிக்கின்ற வாக்குகளும் ஒரு புறத்தில் அடுத்த அணியிலே இருக்கின்ற இனவாதிகளுக்கே சாதகமானதாக அமைந்து விடக் கூடியது என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இது ஒரு நாடு தழுவிய ஒரு யுகப் போராட்டம்
ஏகாதிபத்திய சக்திகள் இந்த நாட்டுக்குள்ளே செய்கின்ற சித்து விளையாட்டுக்களைக் கண்டு இனியும் வாழாதிருக்க முடியாது.
இந்த நாட்டைப் காப்பாற்ற புதிய யுக மாற்றம் தேவை.
பச்சோந்தித் தனமான முட்டாள் தனமான அரசியலில் இருந்து விடுபட யுக மாற்றம் எமக்குத் தேவை.
புதிய போக்கிலே இந்த நாட்டைக் கொண்டு போக வேண்டும். சிறுபான்மையினர் இதுவரை காலமும்பட்ட அத்தனை அவலஸ்தைக்கும் முடிவு கண்டாக வேண்டும். அதற்குப் பொருத்தமான தெரிவாக தற்போது இருக்கின்ற தலைமை சஜித் பிறேமதாஸாவேதான்” என்றார்.
0 Comments:
Post a Comment