10 Oct 2019

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முதியோர்களை கௌரவிக்கும்விசேட நிகழ்வு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முதியோர்களை கௌரவிக்கும்விசேட நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முதியோர்களை கௌரவிக்கும்விசேட நிகழ்வொன்று (௦7-10-2019) மாலை களுவாஞ்சிகுடிநந்தவனம் முதியோர் இல்ல வளவில் இடம்பெற்றது.

முதியோருக்கான தேசிய செயலகம்,மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் ,மாவட்ட செயலகம் என்பன இணைந்துஏற்றுபாடு செய்திருந்த இந்த கௌரவிப்பு விழாவில்மாவட்ட அரசாங்க அதிபர் மாணி க்கம் உதயகுமார் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டார்.

கிழக்குமாகாண சமூக சேவைகள்பணிப்பாளர் என்.மதிவண்ணன்,மண்முனை தென் எருவில்பற்றுபிரதேசசெயலாளர் திருமதி.சிவப்பிரியாவில்வரட்ணம் ஆகியோர் கௌரவ அதியாகக்கலந்துசிறப்பித்தனர்.

இங்கு 1 பிரதேச செயலாளர்களிலுமிருந்துதெரிவுசெய்யப்பட்ட முதியோர்களுக்கு பொன்னாடைபோர்த்தியும் ,மலர்மாலை அணிவித்தும் ,சான்றிதல்கள்,பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி முதியோர்சம்மேளன தலைவர் கே.பேரின்பநாயகம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்  முதியோர்களால் ,நாட்டு கூத்து,நடனம்.பாடல்,போன்ற சிறப்பு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இது தவிர மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் முதியோர்சம்மேளனங்களுக்கும் சிறப்புப்பரில்கள் வழங்கப்பட்டன.

இங்கு அரசாங்க அதிபர் உதயகுமார்கருத்து வெளியிடுகையில்இன்றும் முதியோர்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர் அவர்களை மேலும் ஊக்குவிக்க எதிர்காலத்தில் முதியோர்கள் இல்லங்கள் என அழைக்கப்படாது சிரேஸ்ட பிரஜைகள் நிலையங்கள் என மாற்றம்பெறவேண்டும்.

இதேபோல் இத்தகைய திறமை அனுபவங்களை கொண்டுள்ள முதியோர்களை ஒதுக்கி விடாது அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்களில் இணைத்து அவர்களை சமூகமயப்படுத்த அரச உத்தியோகத்தர்கள் அக்கறை செலுத்தவேண்டும் எனக்குறிப்பிட்டார்.







SHARE

Author: verified_user

0 Comments: