முன்யோசனையின்றி முட்டுக் கொடுக்க முடியாது கிழக்கு முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்.
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் முன் யோசனையின்றி முட்டுக் கொடுக்க முடியாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் யாரை ஆதரிப்பது எள்ற கேள்விகள் எழுந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் விழிப்படைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை 01.10.2019 விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விழிப்புக்குப் பின்னரான காலகட்டத்திலும் பல்வேறு அரசியல் அழுத்தங்களால் முஸ்லிம்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன் பேரில் பல பின் விளைவுகளையும் பாதிப்புக்களையும் சந்தித்த வரலாறுகள் நிறைய உண்டு.
யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரான சமீபத்திய அரசாட்சிக் காலகட்டங்களிலேயே முஸ்லிம்கள் அதிக இழப்புக்களையும் அவமானங்களையும் அச்சுறுத்தல்களையும் சந்திக்க நேர்ந்தது.
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் சமீபத்திய காலகட்டங்களில்தான் முஸ்லிம்கள் உயிர் உடமை இழப்புக்களையும் பாதுகாப்பில்லாத சூழ்நிலைமையையும் உயிர்வாழ்வதற்குத் உரிமையில்லாத அச்சுறுத்தலையும் எதிர்கொண்டார்கள்.
எனவே, இவற்றைப் படிப்பினையாக வைத்து எதிர்கால அச்சமற்ற கௌரமான வாழ்வுக்கான அரசியல் வியூகங்களை வகுப்பதோடு முஸ்லிம்களின் நியாயமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் துணை நிற்கும் ஒருவருக்கே நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கி ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
கடந்த கால முஸ்லிம அரசியலில் விடப்பட்ட வரலாற்றுத் தவறுகள் இனிமேலும் இடம்பெறக் கூடாது அதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒருபோதும் வாய்ப்பளித்துவிடக் கூடாது” என்றும் அந்த அறிக்கiயில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment