23 Oct 2019

மட்டக்களப்பில் வடகீழ் பருவப்பெயர்ச்சி காலநிலையினால் ஏற்படும் அனர்த்தம் சம்பந்தமான முன்னாயர்த்த அவசரமான கலந்துரையாடல்.

SHARE
மட்டக்களப்பில் வடகீழ் பருவப்பெயர்ச்சி காலநிலையினால் ஏற்படும் அனர்த்தம் சம்பந்தமான முன்னாயர்த்த அவசரமான கலந்துரையாடல்.
மட்டக்களப்பில் வடகீழ் பருவப்பெயர்ச்சி காலநிலையினால் ஏற்படும் அனர்த்தம் சம்பந்தமான முன்னாயர்த்த அவசரமான கலந்துரையாடல் கூட்டமும், நடைபெறவுள்ள தேர்தலுக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றிய கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் புதன்கிழமை(23) மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தின் அனர்த்த முன்னாயர்த்த உதவிப்பணிப்பாளர் சதுர லியனாராச்சி ஹிரான், உலக உணவு திட்டத்தின் அதிகாரி ஜே.ஹெட்டியாராட்சி, மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதான பொறியியலாளர் ஆர்.ரஜனி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ஏ.சீ.எம்.சியாத், மாவட்ட தேர்தல் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஆர்.சசீலன், மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம்.ஜெயரெட்ண, மாவட்ட நிவாரண உத்தியோகஸ்தர் ஆர்.சிவநாதன், மற்றும் பிராந்திய சுகாதார திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகஸ்தர்கள், முப்படையினர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது தற்போது வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலையினால் மாவட்டம் அனர்த்தத்திற்கு முகம்கொடுக்கவுள்ளது. இதனை கருத்திற்கொண்டு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச, கிராமட்ட அனர்த்த பாதுகாப்பு பிரிவுகளை சுயமாக இயங்கச் செய்து மாவட்ட அனர்த்த பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன. அனர்த்தினால் பாதிகப்படும் பொதுமக்களை முறையாக பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் 272 அனர்த்த பாதுகாப்பு முகாம்களை தயார்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசன குளங்கள்,நீர்தேக்கங்கள்,ஆறுகளின் நீர்மட்டத்தை முறையாக கண்காணித்தலும்,மேலதிகமான மழைநீரை சேமித்து வெளியேற்றல்,பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு தயார்படுத்தல் வேலைகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவுடனும்,முப்படையினரின் உதவியுடனும் முன்னெடுப்பதற்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கல்லாறு, கல்லடி, பனிச்சங்கேணி, வெருகல், கல்குடா, போன்ற பிரதேசத்தில் உள்ள முகத்துவாரங்களூடாக மேலதிக மழைநீரை வெளியேற்றுவதற்கு உரிய அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பருவப்பெயர்ச்சி காலநிலையினால் பாதிக்கப்படும் பிரதேசங்களின் போக்குவரத்து பிரச்சனைகளை இணங்கண்டு முறையான போக்குவரத்து சேவைகள், படகுச்சேவைகளை தயார்படுத்தல், மாவட்ட அனர்த்த முகாவைத்துவ பிரிவு, பிரதேச, கிராமட்ட குழுக்களின் உதவியுடன் வெள்ளநீரை வெளியேற்றல், உள்ளுராட்சி மன்றங்களின் உதவியுடன் பிரதேசத்தில் முறையாக திண்மக்கழிவகற்றலை மேற்கொள்ளல், தொற்றுநோய்களை கட்டுப்படுத்தல், டெங்கு பற்றிய பிரதான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து டெங்கிலிருந்து பாதாத்தல் போன்றன விரிவாக கலந்துரையாடப்பட்டன. 




SHARE

Author: verified_user

0 Comments: