மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் அண்மையில் சிறுவர், முதியோர் தின நிகழ்வு நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதியோர்கள், சிறுவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
இதன்போது, முதியோர்கள், சிறுவர்கள் மாலை அணிந்து வரவேற்கப்பட்டனர். முதியோர்கள் தமது வாழ்நாள் கால அனுபவங்களை சிறுவர்களிடத்தில் பகிர்ந்து கொண்டனர். மேலும் கிராமத்தில் வயதுகூடிய முதியோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு, பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிறுவர்களை மகிழ்வூட்டும் வகையில் பல்வேறு விளையாட்டுக்கள் ஒழுங்கி செய்து நடாத்தப்பட்டமையுடன், கலந்து கொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment