மட்டக்களப்பு சுற்றாடலில் ஏற்படும் பாதிப்புக்களை தீர்த்துவைப்பது தொடர்பிலான கூட்டம்.
மட்டக்களப்பு சுற்றாடலில் ஏற்படும் பாதிப்புக்களை தீர்த்துவைக்கவும் மற்றும் சுற்றாடலைபாதுகாக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் மேலதிகஅரசாங்கஅதிபர் திருமதி.சுதர்சினி சறிகாந் தலைமையில் செவ்வாய்க்கிழமை (22) கூட்டம் நடைபெற்றது.
இம் மாவட்டத்தில் எதிர்நோக்கும் சுற்றாடல் பிரச்சனைகளைவிவரமாக ஆராயப்பட்டதுடன் எதிர் காலத்தில் இம் மாவட்டத்தில் சுற்றாடல் தொடர்பில் எதிர்நோக்கும் சவால்களுக்கு அதிகாரசபை, பிரதேசசெயலகம், உள்ளுராட்சிமன்றம், சுற்றாடல் வளர்ச்சியில் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள் கவனம் செலுத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இத்துடன் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் பற்றியும் ஆராயப்பட்டன. மத்திய சுற்றாடல் அதிகாரசபை உதவிப்பணிப்பாளர் கே.கோகுலராஜ் இம் மாவட்டத்தில் எதிர் நோக்கும் பிரச்சனைகளை விபரமாக எடுத்துரைத்தார்.
அத்துடன் கரையோரபோரல் திணைக்களம், சுகாதாரதிணைக்களம், உள்ளுராட்சிசபைகள் எதிர் நோக்குகின்ற சுற்றாடல் பிரச்சனைகளை எடுத்து நோக்கி அதற்குரிய தீர்வுகளை எடுத்துரைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட அரசதிணைக்கள தலைவர்கள், உள்ளுராட்சி தலைவர்கள், மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment