ஆரையம்பதியில் நல்லிணக்கம் தொடர்பான இடம்பெற்ற ஆக்கபூர்வ கருத்தாடல்.
நல்லிணக்கம் தொடர்பாக இளைஞர் யுவதிகளுக்கான ஆக்கபூர்வமான கருத்தாடல் செயலமர்வொன்று தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரனையுடன் செவ்வாய்க்கிழமை (22) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தியின் ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி இதன்போது கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் பட்டிப்பளை, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களும் மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை நடாத்தியிருந்தனர்.
நிகழ்வில் கிராமமட்ட குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வண்ணமான பயிற்ச்சியினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment