முனைக்காடு பாடசாலையில் நான்கு மதத்தினர் இணைந்து கொண்டாடிய தீபாவளி.
சமய மற்றும் கலாசார விழாக்களை ஒன்றிணைத்துக் கொண்டாடும் வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் இதனை நடாத்தியது.
வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவ மதகுருமார்களும், மாணவர்களும் வரவேற்கப்பட்டனர்.
தீபாவளி கதையைக்கூறும் நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டமையுடன், நான்கு மதத்தினரைச் சேர்ந்த மாணவர்களும் தீபங்களை வரிசைகளாக ஏற்றி தீபாவளியை கொண்டாடினர். மேலும், பூசை வழிபாடுகளும், நான்கு மத மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
கலந்துகொண்ட மாணவர்களுக்கும், அதிதிகளுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமையுடன் ஒன்றாக ஒற்றுமையுடன் செயற்படும் பொருட்டான விளையாட்டுக்களும் நடைபெற்றன.
நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் கலந்து கொண்டமையுடன், வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் சோ.சுரநுதன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நான்கு மதத்தினர் பங்கேற்ற தீபாவளிக் கொண்டாட்டம் திங்கட்கிழமை (28) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
சமய மற்றும் கலாசார விழாக்களை ஒன்றிணைத்துக் கொண்டாடும் வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் இதனை நடாத்தியது.
வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவ மதகுருமார்களும், மாணவர்களும் வரவேற்கப்பட்டனர்.
தீபாவளி கதையைக்கூறும் நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டமையுடன், நான்கு மதத்தினரைச் சேர்ந்த மாணவர்களும் தீபங்களை வரிசைகளாக ஏற்றி தீபாவளியை கொண்டாடினர். மேலும், பூசை வழிபாடுகளும், நான்கு மத மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
கலந்துகொண்ட மாணவர்களுக்கும், அதிதிகளுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமையுடன் ஒன்றாக ஒற்றுமையுடன் செயற்படும் பொருட்டான விளையாட்டுக்களும் நடைபெற்றன.
நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் கலந்து கொண்டமையுடன், வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் சோ.சுரநுதன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment