மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத்திட்டத்தை தூர நோக்கு சிந்தனையில் அமுல்படுத்தியது வரவேற்கத்தக்கதாகும் - மட்டு.மேலதிக அரசாங்க அதிபர்.
தேசிய மரநடுகை தினத்தில் மரத்தை நாட்டிவிட்டு அதனை ஒரு விழாவாகக் கொண்டாடிவிட்டு, அதனை மறக்கின்ற இன்றய காலகட்டத்திலே, இயற்கையின் சமநிலையைப் பேணுகின்ற காடுகளைப் பேணுகின்ற, நாங்கள் எதிர் நோக்குகின்ற பஞ்சத்தையும் வரட்சியையும் குறைப்பதற்காக வேண்டிய மிகவும் இடப்பற்றாக்குறை நிறைந்த இந்தப்பிரதேசத்தில் இவ்வாறான மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத்திட்டத்தை தூர நோக்குடன் சிறந்த திட்டமிடலின் கீழ், அமுல்படுத்துவதற்கு முன்வந்தமை மிகவும் வரவேற்கத்தக்கதாகும். என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தெரிவித்தார்.
மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத்திட்டம் ஒன்று செவ்வாய்க்கிழமை (01) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி வடக்கு முதலாம் பிரிவில் இடம்பெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்திலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த, அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில், மாவட்ட சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளர் திருமதி.பாக்கியராஜா, மண்முனை தென் எருவில் பற்று உதவி பிதேச செயலாளர் திருமதி.ந.சத்தியகௌரி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன், மற்று பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், பிரதேச சுற்றாடற் கழக் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த மேலதிலக அரசாங்க அதிபர்…
இம்மாதம் முழுவதும் தேசிய மரநடுகை மாதமாக நாம் அனுஸ்ட்டிக்க இருக்கின்றோம். அவற்றுக்கு முன்னுமாரணமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. தற்போதைய இளைஞர் யுவதிகள், சமூக வலைத்தளங்களிலும், தகவல் தொழில் நுட்பத்திலும், மூழ்கிக்கிடக்கின்ற இந்நிலையில், அவர்கள் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றிச் சிந்திக்கின்றார்கள் இல்லை என்பதற்குப் புறநடையாக இந்தப் பிரதேச இளைஞர்கள் இந்த காடுவளர்ப்புத்திட்டத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதையிட்டு நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
இன்றய இளைஞர்கள் நாளைய நலைவர்கள் என்று நாங்கள் கூறினாலும் இவ்வாறான நடைமுறைகளை நாங்கள் பின்பற்றாதவிடத்து அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இந்தப்பிரசேத்தில் இபிரதேச செயலாளருடன் இணைந்து இப்பகுதி மக்கள் செயற்படுகின்றவிடையம் மிகவும் வரவேற்கத்தக்தாகும்.
தற்போது பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் சுற்றாடல் பற்றியும், வனவாக்கம் பற்றியும் அக்கறையில்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்பதை மாற்றுகின்ற வகையில் சிறுவர்தினமான இன்றய நாழில் இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களையும் உள்ளீர்ப்புச் செய்து அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியமை வரவேற்கத்தக்கதாகும். இந்நிகழ்வு இப்பிரதேசத்தில் மாத்திரமின்றி மாவட்டத்தின் ஒரு மையிற் கல்லாக மாறும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment