1 Oct 2019

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டம்.

SHARE
டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டம். 
அம்கோர் எனும் அமைப்பின் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பிரதேசத்தில் உள்ள கிராமிய அனர்த்த  உதவிக் குழுக்களுக்கான தலைமைத்துவத் திறன் விருத்தி நிகழ்வொன்று செவ்வாய்கிழமை (01) ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இடம்பெற்றது.

இதன்போது கலந்து கொண்டவர்களில் 5 குழுக்களாகப் பிரிகக்கப்பட்டு அப்பகுதியில் கிடைக்கின்ற வளங்களைக் கொண்டு, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைக் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பிலான போட்டி நிகழ்வுகள் இடம்பெற்ற்றன.

இந்நிலையில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் கடற்கரை மணலில் உருவங்கள் செய்து அப்பகுதியில் கிடைக்கின் வளங்களைப் பெற்றுக் கொண்டு கிராம மட்டத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை தத்ரூபமாக செயன்முறைவடிவில் எடுத்தியம்பினர். 

மேலும் இதன்போது தலைமைத்துவம், ஆளுமைவிருத்தி, எதிர்காலத்தில் எவ்வாறு பிரதேசமட்டத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையளானம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்துதால் போன்ற பல விடையஙகள் இடன்போது எடுத்தியம்பபட்டன.

இந்நிகழ்வில் அம்கோர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக அனர்த்த முன்னாயத்த அபிவிருத்தி உத்தியோகஸ்த்தனர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















SHARE

Author: verified_user

0 Comments: