சமூகபாதுகாப்பு சபையினால் நடாத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு சிறப்பாக செயற்பட்ட பிரதேச செயலகங்களுக்கான விருதுவழங்கல் விழாவில் மட்டக்களப்பு வடக்கு பிரதேச முன்னாள் செயலாளர் எம்.தயாபரன் அவர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாமிடம் கிடைத்துள்ளது.
2018 ஆம் ஆண்டு பிரதேச செயலாளரின் நிருவாக காலத்தில் சமூகபாதுகாப்பு சபையில் அதிகூடிய அங்கத்தவர்களை இணைத்துக் கொண்டு கூடுதலான பணத்தொகையை வைப்பு செய்து சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான கரிசினை எடுத்து செயற்பட்டமைக்காக குறித்தவிருதானது வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் சமூகபாதுகாப்பு சபையின் தலைவர் பீ.எம்.தேவக்கவீரசிங்க அவர்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது. இதன்போதே பிரதேச செயலாளர் தயாரன் அவர்களுக்கு குறித்தவிருதும் சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி சாதனையை நிலைநாட்டுவதற்கு தன்னுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியபற்றி கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மற்றும் ஏணைய உத்தியோகத்தர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெருவித்துக் கொள்வதாக இதன்போது அவர் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment