18 Sept 2019

மட்டக்களப்பில் இலங்கை போக்குவரத்துச் சாலை பஸ் ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால் பஸ்தரிப்பு நிலையம் வெறிச்சோடிக்கிடக்கின்றது.

SHARE
மட்டக்களப்பில் இலங்கை போக்குவரத்துச் சாலை பஸ் ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால் பஸ்தரிப்பு நிலையம் வெறிச்சோடிக்கிடக்கின்றது.
2500 சம்பளப் பிரச்சினை,தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களை நிரந்தரமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள், நாடளாவிய ரீதியிலும் மட்டக்களப்பிலும் முன்னெடுப்பதால் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் தமது போராட்டங்களை இவ்வாறு முன்னெடுப்பதால் பொதுமக்கள்,அரசாங்க ஊழியர்கள், மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றார்கள்.

இதனால் அரசாங்க ஊழியர்கள்,மாணவர்கள்,கல்வியக்கல்லூரி மாணவர்கள்,தூர இடங்களில் வேலைக்குச் செல்பவர்கள் பல மணித்தியாலங்கள் வீதியில் காத்துக்கிடந்து ஏமாற்றமடைந்திருப்பதாகவும்,பயணச்சீட்டை பெற்றவர்கள் தங்களின் முழுமையான போக்குவத்தில் ஈடுபடமுடியாமலும்,கவலையுடன் இருப்பதாகவும்,அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் தனியார் பஸ்ஸில் பல அசௌரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் இவ்வாறு கவலை தெரிவித்தார்கள்.
இதற்கமைய, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் .போ. பஸ் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால் தனியார் பஸ் போக்குவரத்து பஸ்கள்தான் மட்டும்தான் சேவையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம், அகில இலங்கை மோட்டார் ஊழியர் சங்கம், இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் பெருந் தொகையான பயணிகள்,அரசாங்க உத்தியோகஸ்தர்கள், பாடசாலை மாணவர்கள்,கல்வியக்கல்லூரி மாணவர்கள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றார்கள்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம், தமது கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும் வரை தொடரவுள்ளதாகவும் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு, காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, ஏறாவூர்,வாகரை,வாழைச்சேனை போன்ற  சாலையிலிருந்து தினமும் நாட்டின் நாலா பாகங்களுக்கும் சேவையில் ஈடுபட்டு வரும் சுமார் 25க்கும் மேற்பட்ட பஸ்கள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடவில்லை. அத்தோடு, இங்கு சேவையாற்றும் சுமார் 300க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் கடமைக்குச் சமுகமளிக்கவில்லை.

போக்குவரத்துச் சபை ஊழியர்களின் இப்பணிப் பகிஷ்கரிப்பால்  பயணிகள் இல்லாமல் மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி,காத்தான்குடி,வாகரை,வாழைச்சேனை  பஸ் தரிப்பு நிலையங்களில் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.இவ்வாறு பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதால் தனியார் பஸ்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் பஸ் போக்குவரத்து சேவையை முன்னெடுத்து வருகின்றார்கள்.இதன்படி மட்டக்களப்பு -கல்முனை,மட்டக்களப்பு -வாழைச்சேனை,மற்றும் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, வெல்லாவெளி, வக்கியெல்ல,உன்னிச்சை,வாகரை,கரடியனாறு போன்ற இடங்களில் சேவையில் ஈடுபடுவதை காணக்கூடியதாகவுள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் மாணவர்கள், பெண்கள், வயோதிபர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.

SHARE

Author: verified_user

0 Comments: