களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மக்களிடம் கையளிக்கவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் திறந்து வைத்து அப்பகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவேண்டும் என அப்பகுதிவாழ் விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ.ஹரிசன் உள்ளிட்ட பல மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, கடந்த 22.07.2017 அன்று அடிக்கல் நடப்பட்டு தற்போது அதன் நிருமாணப் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் இதுவரையில் அதனைத் திறந்து மக்களிடம் கையளிக்காமலுள்ளது.
மிளகாய், கத்தரி, வெண்டி, வெங்காயம், வெற்றிலை, பயற்றை, உள்ளிட்ட பல மேட்டுநிலப் பயிற் செய்கைகக்குப் பெயர்போன அப்பிரதேசத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் பட்சத்தில் தமது உற்பத்திகளை மிகவும் நியாயமான விலையில் விற்கவும், வாங்கவும், ஏதுவாக அமையும், எனவே 300 மில்லியன் ரூபா மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் அமையப் பெற்றுள்ள இப்பொருளாதார மத்திய நிலையத்தை விரைவில் திறந்து வைத்து இப்பகுதி விவசாயிகளின் பொருளாதாரத்திலும் மாற்றத்தைக் கொண்டுவர சம்மந்தப்பட்டவர்கள் துரிதகதியில் முன்வரவேண்டும் என அப்பகுதிவாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment