ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் பேரணி.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்த மட்டக்களப்பில் அவரது ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாஸவின் எதிர்காலம் எனும் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ம.ஜெகவண்ணன் தலைமையில் ஆதரவாக பேரணியில் வியாழக்கிழமை(26) மாலை ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அவர்களது காரியாலயத்திலிருந்து சுமார் 100 இற்கு மேற்பட்ட இளைஞர்கள் சஜித் பிரேமதாஸவின் புகைப்படத்தைத் தாங்கியவாறு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு அரசடி ஊடாக மணிக்கூட்டுக்கோபுரம், பேரூந்து தரிப்பிடம் ஊடாக மட்டக்களப்பு திருமலை வீதியூடாகச் சென்று மீண்டும் கல்லடிப் பாலத்தில் அமைந்துள்ள அவர்களது காரியாலயத்தைச் சென்றடைந்தனர்.
பட்டாசு வெடிகள் முழங்க வேற்றி எமக்கே, எமது வேட்பாளர் சஜித் ஐயா நெவம்பர் 16 ஆம் திகதி இலங்கையில் 8 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வருவார், என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு அவர்கள் போரணியில் ஈடுபட்டனர்.
0 Comments:
Post a Comment