மட்டக்களப்பில் குறிப்பாக ஆரையம்பதி ரூபவ் நாவற்குடா கல்லடி தாளங்குடா
பகுதிகளில் உள்ள வேலை தேடி கொண்டிருக்கின்ற இளைஞர்யுவதிகளிடம்
கையூட்டாகவும் பணமும் நகைகளும் பெற்று வருவது தொடர்பாக வைத்தியசாலை
வட்டாரத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து
வைத்தியசாலையில் பணிபுரிகின்ற சிற்றூளியர் ஒருவரே இக்
கைங்கரியத்தினை புரிந்து வருவது வைத்தியசாலை நிர்வாகத்தினரால்
உணரப்பட்டு குறித்த சிற்றூளியர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகின்றது.
சிற்றூழியர் நியமனம் போதன வைத்தியசாலையின் நிர்வாக மட்டத்தில்
மேற்கொள்ளப்படுவதில்லை என்பதையும் இவ்விடயத்திற்கு வைத்தியசாலை
நிர்வாகம் எவ்விதமான சம்மந்தமும் இல்லை என்பதை வைத்தியசாலை வட்டாரம்
பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அரச தொழில் பெறுவதற்கு என சில நடைமுறைகளில் அடிப்படையிலே
நியமனம் வழங்கப்பட்டுவருவது என்பது யாவரும் அறிந்தது மாறாக பணம் நகை
மூலமாக அரசபதவியை பெற முடியாது என்பதை பொதுமக்கள் விழிப்புடன்
தெரிந்து கொள்ள வேண்டும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நற்பெயரை இவ்வாரான நாசகார
செயலில் ரூடவ்டுபடுகின்ற ஒரு சிலரினரால் ஏற்படுத்தி வருகின்றமை
வேதனைக்குரிய ஒரு விடயமாக வைத்தியசாலையின் நிர்வாகம்
தெரிவிக்கின்றது.
இவ்வாறான மோசடி நடைபெற்று வருவது குறித்து பொதுமக்கள் விழிப்புடன்
இருக்க வேண்டும் என வேண்டப்படுகின்றது.
0 Comments:
Post a Comment