தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி பொதுஜனப் பெரமுனவில் இணைந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தலைமையில் கல்குடா தொகுதி பிரதேச சபை தமிழ் உறுப்பினர்கள் 5 பேருடன் அவர்களின் ஆதரவாளர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமார் அவர்களுடன் இன்று பாசிக்குடா “ளுரn சுயல சுநளவ ர்ழரளந” விடுதியில் வைத்து கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பானர் ப.சந்திரகுமார் ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவர்களை ஆதரித்து வெற்றிபெறச் செய்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆலோசகர், விவசாய அமைப்பு தலைவர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment