5 Sept 2019

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அபிவிருத்திபொன்று தற்போதைய அரசாங்கத்தினால் எதுவித அபிவிருத்திகளும் நடைபெறவில்லை – சந்திரகுமார்.

SHARE
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அபிவிருத்திபொன்று தற்போதைய அரசாங்கத்தினால் எதுவித அபிவிருத்திகளும் நடைபெறவில்லை – சந்திரகுமார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதுவித பலனும் கிடைக்காத காரணத்தினால், தற்போது தமிழ் மக்கள்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கடசியை விரும்புகின்றார்கள். இலங்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். என  

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், செயற்பாட்டாளருமான பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 

தற்கோதைய அரசியல் நிலவரம் குறித்து மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து செவ்வாய்கிழமை (03) கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அபிவிருத்திபொன்று தற்போதைய அரசாங்கத்தினால் எதுவித அபிவிருத்திகளும் நடைபெறவில்லை. வீதி அபிவிருத்தி யாழ் புகையிரத சேவை, பட்டதாரிகளின் தொழில்வாய்ப்பு, போன்ற பல அபிவிருத்திகைளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில்தான் நடைபெற்றன. இதுபோன்ற அபிவிருத்திகளை எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபக்ஸ வெற்றி பெற்றதன் பின்னர் மேற்கொள்ளவுள்ளோம்.

எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபக்ஸ வெற்றி பெற்றதன் பின்னர் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்தப்படும் என எம்மிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில தமிழ் மக்களுக்கு உறுதியான தீர்வு வழங்கக் கூடிய தகுதி யாருக்கும் இருக்கவில்லை. தமிழ் மக்களுக்குரிய தீர்வை வழங்கக் கூடிய தகுதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்திக்கு மாத்திரமே உள்ளது என்பதை உலகமே நம்புகின்றது. இதனை தமிழ் மக்களும் நம்புகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள், முன்னாள் போராளிகள், போன்றபலரின் வாழ்வாதாரங்கைளை மேம்படுத்துவதற்கும், அரசியல் கைதிகளின் விடுதலை செய்வதாகவும், எமக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் மக்களின் கோரிக்கைகளையும், சிங்கள மக்களின் ஆதரவுடன் நிறைவேற்றித் தருவதற்கு எமது ஜனாதிபதி வேட்பாளர் திடசங்கற்பம் பூண்டுள்ளார். 

இவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் நிறைவேற்றித் தருவார்கள் என்பதை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் நம்புகின்றார்கள் 75 வீதமான தமிழ் மக்கள் எமது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பின்னார் உள்ளார்கள். எந்த தேசியக் கட்சிக்கும் கிடைக்காத வரவேற்பும், மக்கள் ஆதரவும் தற்போது எமது கட்சிக்கு மட்டக்களப்பு மக்கள் வழங்கி வருகின்றார்கள். எனவே கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் முதலமைச்சரைக் கொடுத்ததும் எமது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸதான், எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு விடிவு கிடைக்கும். என நாம் நம்புகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம பிரிவுகளிலும் எமது கட்சியின் குழுக்களை அமைத்து, அதில் நிருவாகக் கட்டமைப்புக்களை இட்டு அவர்கள் மூலமாக மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் செயற்பாடுகளை நாம் தற்போது முன்னகர்தியுள்ளோம். எதிர் வரும் ஜனவரி மாதம் எமது ஆட்சி வந்ததும் தற்போது மக்களால் முன் வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: