ஜனாதிபதித் தேர்தலுக்கு எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எதுவித தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படவிலலை - ஸ்ரீநேசன் எம்.பி
ஜனாதிபதித் தேர்தலுக்கு எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எதுவித தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படவிலலை. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பாத்துவிட்டுத்தான் தமிழ் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள். அதற்குரிய வழிகாட்டுதல்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யும்.
கண்ணை மூடிக்கொண்டு, வரதராஜப் பெருமாள், டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான், பிள்ளையான், போன்றவர்கள், சொல்லும் கருத்துக்களுக்கு கடந்த காலங்களில் வந்த தடங்களுக்குப் பின்னால் செல்வதற்கு மக்கள் தயாரில்லை. அவர்கள் கோதபாய ராஜபக்வவுக்கு ஆதரவு வழங்கப்போகின்றார்கள் என்றால் அவர் கடந்த காலத்தில் என்ன செய்தார் என்பது எமக்குத் தெரிவும், எதிர் காலத்தில் என்ன செய்யப்போகின்றார் என்பது பற்றித் தெழிவு படுத்தவேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
முண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜின் வேண்டுகோளிற்கிணங்க, கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபா செலவில் புணரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி பிள்ளையார் வீதியைத் திறந்து வைக்கும் நிகழ்வும், அத்திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபா செலவில் களுவாஞ்சிகுடி திலானை வீதியின் புணரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் செவ்வாய்கிழமை (03) இடம்பெற்றது. இதன்போது கலந்து கொணடு மேற்படி அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்து விட்டு கருத்துத் தெரிவிககையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது என்பது தெடர்பில் எங்கும் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. பொதுஜனப் பெரமுன கட்;சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக கோதபாய ராஜபக்ஸவின் பெயர் முன்மொழியப்பட்டிருக்கின்ற நிலையிலும் அவருக்கு அமெரிக்கப் பிரஜாவுரிமை இன்னும் நீக்கப்படவில்லை என்ற ஒரு வாதமும் முன்வைக்கப்படுகின்றது. அவர் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளாத பட்டசத்தில் சிரந்தி ராஜகப்பச தேர்தலில் முன்நிறுத்தப்படுவார் என்ற கருத்தும் நிலவுகின்றது. எனவே ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக இருக்க முடியும் என்பது அக்கட்சியல் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கோதபாய ராஜபக்சவின் கடந்தகால தடையங்கள் தமிழ் மக்களுக்கு கசப்பான உணர்வை ஏற்படுத்துகின்றது. காணாமலாக்கப்பட்டவரிகளின் உறவுகள் பல ஆண்டுகள் கடந்த உபவாசத்தைப் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விடையம் தொடர்பில் அவர்கள் யாரால், ஏன், எவ்வாறு, காணாமலாக்கப்பட்டார்கள் என்பது தொடர்பில் கோதபாய ராஜபக்ச அர்கள் கடந்த காலத்தில் ஒரு வலிமையான பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக செயற்பட்டவர் என்ற அடிப்படையில் தெழிவான ஒரு விடையத்தைப் தமிழ் மக்களுக்குப் பிரகடனப்படுத்த வேண்டும். அக்காலத்தில் ஜனாதிபதிக்கு அடுத்த ஒரு ஜனாதிபதி போன்றுதான் அவர் செயற்பட்டிருக்கின்றார். சரணாகதி அடைந்த போராளிகள், அப்பாவிப் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவர் தொடர்பிலும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில் அவர் தமிழ் மக்களுக்கு ஒரு தெழிவான விளக்கத்தைக் கொடுக்க வேண்டியவராக இருக்கின்றார். அவர் வழங்கும் பதிலைப் பொறுத்துதான் மக்கள் அவரைப் பற்றி சிந்திக்கக்கூடிய நிலமை இருக்கும். இது தமிழ் மக்களுக்கு ஆறாத ஒரு ரணமாக உறுத்திக் கொண்டிருக்கின்றது என்பது முக்கியமான விடையமாகும் கோதபாய ராஜபக்சவை எவ்வாறு அணுகணே;டும், என்பது தொடர்பில் நாங்கள் தமிழ் மக்களுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக இன்னும் எவரும் முன்மொழியப்படவிலலை, அதிலும் சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரம சிங்க, கரு ஜெயசூரிய ஆகியோரின் பெயர்கள் வெளிவருகின்றன. அவர்கள் தீர்க்கமானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். அந்த தீர்மானத்தின் பின்னர் மிக முக்கியமாக இனப்பிரச்சனை தொடர்பில் அவர்களின் தெழிவான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அவர்கள் சொல்ல வேண்டும். இனப்பிரச்சனையை பத்தோடு ஒன்று பதினொன்றாக அவர்கள் கணித்துவிட முடியாது.
மிக முக்கியமாக இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு என்ன வழிமுறை என்பது தொடர்பிலும், இனப்பிரச்சனை தீர்ப்பது தொடர்பில் இலங்கை தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பிரஜயாக்கப்படாமால் ஏனைய மக்களுகளைப்போன்று சம உரிமையுடனும், சம அந்தஸ்த்துடனும், வாழ்வதற்குரிய வழிவகையில் இந்த இனப்பிரச்சனை தீர்க்கப்படல் வேண்டும்.
தமிழ் மக்கள் தங்களுடைய கலை, கலாசார, விழுமியங்கைளப் பேணிப்பாதுகாக்கப்படக்கூடிய வகையில் காணி, பொலிஸ், நிதி அதிகாரங்கள், அமையக்கூடிய வகையில் தீர்வுகள் அமையவேண்டும். இந்த தீர்வு விடையத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் எந்தளவுக்கு தொலை நோக்குடன் சிந்திக்கின்றார்கள் என்பது எங்களுக்கு முக்கியமாக இருக்கின்றது.
சஜித் பிரேமதாஸவைப் பற்றி சிங்களவர், தழிழர், முஸ்லிம் மக்கள் அனைவரும் அனேகமாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். தேசிய இனப்பிரச்சனையை ஒரு தீர்க்கமான முறையிலும். ஒரு நிலையான தீர்வுக்குரிய எண்ணத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும். 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவேன் என அவர் சொல்லியிருக்கின்றார். 13 வது திருத்தம்கூட ஒரு முழுமையான திருத்தமாக அமையவில்லை காணி, பொலிஸ், நிதி போன்ற விடையங்கள் போன்றவற்றில், சில குறைபாடுகள் காணப்படுகின்றன. காணி, பொலிஸ் மற்றும் வெளி நாட்;டு நிதிகளைக் கையாளக்கூடிய வித்தில் எமக்கு தீர்வுகளும், அதிகாரப்பகிர்வும் கிடைக்க வேண்டும். அவ்வாறானதொரு தீர்க்கமானதொரு கொள்கையை தமிழ் மக்களிடத்தில் மாத்திரமின்றி சிங்கள மக்களிடத்திலும் தன்னுடைய கருத்துக்களைக் கொண்டு செல்லும் ஒரு தலைவராக சஜித் பிரேமதாஸ இருந்தால் தமிழ் மக்கள் அதுபற்றிப் பரிசீலிப்பதற்குத் தயாராக இருக்கின்றார்கள்.
ஜேவிப்பியினரும் அனுர குமார திசாநாயக்க அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நிருத்தியிருக்கின்றனர். அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஒரு முற்போக்கான சிந்தனையை வெளிப்படுத்தி வருகின்றார். இன, மத பேதமின்றிச் செயற்படுபவதாகக் காணப்படுகின்றார். கடந்த காலத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகும் வாக்கழித்து, வாக்கழித்து, சலித்துப்போயிருக்கின்ற நிலையில் ஒரு மூன்றாம் தரப்பினருக்கு ஆதரவு வழங்கினால் என்ற ஒரு சிந்தனையும் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் ஏமாற்றங்கள்தான் கிடைத்திருக்கின்றன.
எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டார நாயக்கா, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க, போன்றவல்களின் காலத்தில் தீர்வுகள் கிடைக்கவில்லை என்ற ஏக்கத்துடன் இருக்கின்ற மக்களைப் பெறுத்தவரையில், ஒரு மூன்றாம் தரப்பிற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிப்பார்ப்போம் என்ற சிந்தனை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது, இருந்தபோதிலும், ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை.
எனவே ஐக்கிய தேசிக் கட்சியின் சார்பில் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர் வெறுமனே அபிவிருத்தி என்கின்ற விடையத்தைச் சொல்லிக் கொண்டிருக்காமல், நீடித்திருக்கின்ற இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்க்கமான ஒரு முடிவைப் பெறக்கூடிய ஒரு அர்த்த புஸ்ட்டியான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றபோது. இவ்வடையத்தை தமிழ் மக்கள் ஆழமாகப் பரிசீலிப்பதற்குத் தயாராக இருக்கின்றார்கள். பழமையான இருண்டு கட்சிகளும் இதுவரைகாலமும் மக்களை ஏமாற்றிவிட்டதன் காரணமாக சரிப்படைந்த நிலையில் தமிழ் மக்கள் ஜே.வி.பியின் பக்கம் சிந்திக்கலாமா என்பது தொடர்பிலும் இருக்கத்தான் செய்கின்றார்கள். எனவே அனைத்து கட்சியினரும் தமிழ் மக்களுக்கு என்ன விடையங்களைத் தெரிவிக்கப்போகின்றார்கள் என்பது தொடர்பில் பார்க்கப்டுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எதுவித தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படவிலலை. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பாத்துவிட்டுத்தான் தமிழ் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள். அதற்குரிய வழிகாட்டுதல்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யும்.
கண்ணை மூடிக்கொண்டு, வரதராஜப் பெருமாள், டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான், பிள்ளையான், போன்றவர்கள், சொல்லும் கருத்துக்களுக்கு கடந்த காலங்களில் வந்த தடங்களுக்குப் பின்னால் செல்வதற்கு மக்கள் தயாரில்லை. அவர்கள் கோதபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப்போகின்றார்கள் என்றால் அவர் கடந்த காலத்தில் என்ன செய்தார் என்பது எமக்குத் தெரிவும், எதிர்காலத்தில் என்ன செய்யப்போகின்றார் என்பது பற்றித் தெழிவு படுத்தவேண்டும். தங்களுடைய சுகபோகங்களுக்குகாக அவர்கள் ஒரு வேட்பாளரை ஆதரிக்கின்றார்கள் என்றால் அது நிட்சயமாக தமிழ் மக்களுக்குச் சாதகமாக அமையாது. எனவே மக்கள் உபத்தரம் செய்பவர்கள், யார், தங்களுக்கு உதவி செய்பவர்கள் யார் என்பது தொடர்பில் தெழிவாக புரிந்து வைத்துள்ளார்கள். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment