முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோயில் தீர்த்தக் கேணி என்று இந்துக்களால் உரிமை கோரப்படும் பிரதேசத்தில் இடம்பெற்ற அனைத்து விதிமீறல்களும் மிகவும் மனவேதனைக் உறையவையாகவும் கடும் கண்டனத்திற்குரியது.முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோயில் தீர்த்தக் கேணி என்று இந்துக்களால் உரிமை கோரப்படும் பிரதேசத்தில் இடம்பெற்ற அனைத்து விதிமீறல்களும் மிகவும் மனவேதனைக் உறையவையாகவும் கடும் கண்டனத்திற்குறியனவாகவும் உள்ளது. சட்டத்தை யார் மீறினாலும் அது கண்டனத்திற்குரியது மட்டுமல்லாமல் தண்டனைக்குரியதும்கூட. இவைகளுக்கு அப்பால் நாம் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக நாடு முழுவதும் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை தற்போது சுட்டிக்காட்டி விளக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
என இலங்கை தேசிய ஜனநாயகக் கட்சியின் (சி.என்.டி.பி.) நாரா.டி.அருண்காந்த் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பிர் புதன்கிழமை (25) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் எதிராக மாகாண ஆட்சியை நாடாத்தியது மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களையும் கோயில்களையும் அழிக்கும் நடவடிக்கைகளிலும் மதவாத அரசியல் தலைவர்களின் கையாட்கள் ஈடுபட்டு வந்தனர். இதனை எதிர்கொள்ள முடியாமல் எமது அரசியல் தலைவர்கள் தடுமாறிக் கொண்டிருந்த சமயத்தில் தான் நாம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். அரசியல் பலம் கொண்ட மதவாதிகளை எதிர்கொள்ளக்கூடிய உபாயமாக அதற்கு பதிலடி கொடுக்கக்கூடிய இன்னுமொரு பெரும்பான்மை மதத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயன்படுத்தி பதிலடி அல்லது தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று தீர்மானித்தோம். அதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் மதவாத சக்திகளின் வேகத்தை குறைத்து படிப்படியாக அரசியல் அதிகாரத்திற்கு ஏதாவதொரு கட்சியை கொண்டு வந்து மாகாண சபையை கைப்பற்றலாம் என்று திட்டமிட்டு செயற்பட்டோம்.
அதேவேளையில் நாடுமுழுவதும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் துவேஷ தாக்குதல்களையும் நீண்டகால அடிப்படையில் முடிவுக்கு கொண்டுவர பரந்துபட்ட பௌத்த இந்து ஒற்றுமை வேளைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து அதற்கு பொருத்தமான அதனோடு தொடர்புடைய எண்ணக் கருக்களைக் முன்னெடுக்கக்கூடிய பௌத்த தேரர்களை ஒருங்கிணைத்தோம்.டிகளத்தில் இறங்கி பணியாற்றினோம். கொழும்பு பாபர்வீதி, அம்மன் கோவில் தேர் திருவிழா காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தடைகளை வெற்றிகொண்டது போல பல நூற்றுக்கணக்கான பிணக்குகள் தோன்றுவதற்கு முன்னரே பலப் பிரயோகத்தின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் இந்து கோயில்கள் மீது மதவாத அரசியல் பின்புலம் கொண்டவர்கள் தாக்குதல்களை மேற்கொண்டபோது தமிழ் மக்கள் வெகுண்டெழவில்லை அமைதிகாத்தனர்.
இது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கிழக்கில் மதத்தீவிரவாதிகளை கண்காணிக்க கைதுசெய்ய அழுத்தம் கொடுத்தது மட்டுமன்றி இவை போன்று தொடர்ந்தும் நடக்காதிருக்க மாஹாநாயக்க தேரர்களின் உதவிகளை தொடர்ந்தும் பெற்றுக்கொண்டே இருந்தோம். நிராவியடியில் எம்மவர்களுக்கு பொத்துக்கொண்டு வந்த கோபமும் தன்மான உணர்வும் திருக்கேதீச்சர வளைவு உடைத்து சுக்கு நூறாக்கப்பட்டபோது எங்கு போனது என்றுதான் தெரியவில்லை. எது எப்படியோ இவ்வாறான சந்தர்பத்தில் தான் ஞானசாரதேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைககப்பட்டார். அவரை ஜனாதிபதி மன்னித்து விடுதலை செய்யவேண்டும் என்பது தனிப்பட்ட ஞானசாரதேரருக்காக நாங்கள் தூக்கிய அன்னக் காவடி அல்ல. அவர் அடங்கலான தேரர்கள் எமக்கு செய்த உதவிகளுக்கான நன்றியறிதலே... இதன்மூலம் தமிழர்களது நல்லெண்ணம் வெளிப்படுத்தப்பட்டதேயன்றி யாருக்கு என்ன நஷ்டம்.
முகநூலில் பொங்குபவர்கள் எவராவது என்னோடு போராட்டங்களுக்கு வந்தவர்களா..? அல்லது தமது ஆதரவைத்தான் தெரிவித்தவர்களா? இல்லை இந்து கோயில்கள் பிரச்சினைகளில் ஏதாவது பங்கெடுத்து உதவி ஒத்தாசை புரிந்தவர்களா...? கடந்து வந்த பாதைகளை மறந்த ஒரு இனம் அடுத்த கட்டத்திற்குள் நூழையமுடியாது… இதுவரை காலப்பகுதியில் நாம் பெற்ற வெற்றிகள் அல்லது தடுத்து நிறுத்தப்பட்ட அழிவு நடவடிக்கைகள் வரலாற்றில் ஓர் ஏடு... அந்த ஏட்டை கிழிக்கமுடியாது. தற்போது நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களும் இனி நடக்கப்போகும் சம்பவங்களும் வரலாற்றின் புதிய பக்கங்களாகவிருக்கும்... அவற்றை எதிர்கொள்வதற்கான புதிய தந்திரோபாயங்கள் புதிய வட்டாரங்கள்.... புதிய வலையமைப்புக்களை ஏற்படுத்தி களமாட வேண்டும். இங்கு ஒரு விடயத்தை சுட்டியேகாட்ட வேண்டும். அதாவது கடந்த காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வடக்கிலும் கிழக்கிலும் எம்மால் நடாத்தப்பட்ட கூட்டங்களுக்கு வெகு சிலரே வருகை தந்திருந்தனர். நான் பல முறை வேண்டுகோள்களை விடுத்திருந்தேன். எம்மை பலப்படுத்துங்கள் என்று.... யாருமே கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போதுதான் பலருக்கு திடீரென அருண்காந்த் என்ற மனிதனின் பெயர் ஞாபகத்திற்கு வந்துள்ளது...
இந்து சம்மேளனம் எந்த ஒரு பௌத்த அமைப்பினதும் கிளை அமைப்போ அல்லது அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றும் துணை அமைப்போ கிடையாது. நாம் சுயாதீனமான அமைப்பு.... யாருடைய நிதிவசதியையும் பெறாமல் எவர் துணையுமின்றி செயற்படுகின்றோம். அதேபோன்று நாம் தேரர்களுடன் கைகோர்த்து அவர்களுக்கு வணக்கம் தெரிவிப்பது தனிப்பட்ட சலுகைகளுக்காக அல்ல. எங்கள் நல்லெண்ணங்களைப் புரிந்துகொண்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அவர்களின் துணையை பெற்றுக்கொள்வது மட்டுமன்றி நாட்டின் நிரந்தர அமைதியை பேணுவதற்காகத்தான். என்னுடைய இந்த அணுகு முறையை தோல்வியடையச் செய்ய தமிழர் தரப்பே பல முயற்சிகளை மேற்கொண்டு வந்ததையும் தற்போது மேற்கொண்டுவருவதையும் பின்னர் விரிவாக விளக்குகின்றேன்.தமிழ் அரசியல் தலைவர்களுக்கு புண்ணைப்போல் பிரச்சினைகளும் இருந்துகொண்டே இருக்கவேண்டும்.இல்லாவிட்டால் அரசியல் செய்ய முடியாது.
இப்போது அதற்கான நேரம். கடந்த வருடம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோயில் கமிட்டி தலைவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதில் ஒரு வருட தேர் திருவிழா அல்லது திருவிழாவை நிறுத்தியேனும் பணத்தைச் சேமித்து அந்தப்பணத்தில் கோயிலைச்சுற்றி பலமான வேலிகள் அல்லது சுற்றுச்சுவர் எழுப்பி பொருத்தமான வகையில் வாயிற் கதவுகளை அமைக்க கூறியிருந்தோம்.இதை அவசரமானதொரு விடயமாகக் கருதி மீண்டும் மீண்டும் அறிவித்துக்கொண்டே இருந்தோம்.வழமைப்போலவே எம்மவர்கள் அசட்டை செய்தனர்.எமது கோயில்கள் மட்டுமே அளவில் பெரிதாகவும் ஆனால் சுற்றுமதில் இன்றி வேலிகள் இன்றி வாயிற்கதவுகள் இன்றி திறந்த வீட்டில் நாய் புகக்கூடிய மாதிரி இருக்கின்றது. ஏனைய மத வணக்கஸ்தளங்கள் அளவில் சிறிதாக காணப்படினும் அவற்றைச்சுற்றி பாரிய வேலிகள் அல்லது சுற்றுச்சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கும்.
இரண்டாவதாக இன்னுமொரு கோரிக்கையை விடுத்திருந்தோம்....இனிவரும் காலங்களில் இந்து சம்மேளனத்தின் வலையமைப்பிற்குள் வரும் கோயில் பிரச்சினைகளில் மட்டுமே நாம் தலையிட்டு தீர்வை பெற்றுத்தருவோம் என்று. எமது இந்த கோரிக்கையினை ஏற்று சுமார் 1210 சிறு மற்றும் பெரிய கோயில்கள் தமது உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகளில் தமது சம்மத கடிதங்களை அணுப்பிவைத்திருந்தார்கள்.
எனினும் திருகோணமலை ,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான கோயில்களே எம்மோடு இணைந்துள்ளன.இவைகளுக்கப்பால் பிரச்சினை என்று வந்துவிட்டால் அதை தீர்ப்பதற்கு நாம் வகுத்துக்கொடுக்கக்கூடிய உபாயங்களை ஏற்றுக்கொள்ளாத அல்லது இந்து சம்மேளனத்தின் அணுசரனையுடன் செயற்படவிரும்பாத கோயில்கள் மற்றும் அமைப்புக்களின் பிரச்சினைகளில் தலையிடமாட்டோம் என்று ஒன்பது மாதங்களுக்கு முன்னரே அறிவித்திருந்தோம். இவ்வறிவித்தலுக்குப் பின்னர் வடமாகாணத்தில் உள்ள சில கோவில்களின் தலைவர்கள் தொலைபேசிவாயிலாக தொடர்பு கொண்டு பேசினர்.அவர்கள் கூறிய ஒரே விடயம்....எங்கள் ஊர் பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்கள் அமைப்பின் கீழ் இயங்க அணுமதிக்கமாட்டோம் என்று கூறுகிறார்கள் ஐயா...எங்களை மண்ணித்துவிடுங்கள்...என்றனர்.எனினும் எந்த ஒரு சமுதாயமும் அமைப்பு ரீதியாக செயற்படாவிட்டால் தோல்விகளைக்குவிக்கும் என்பதனால் நாமும் எமது முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டோம்.எனினும் இந்து சம்மேளனத்தின் கீழ் ஒரு குடையமைப்பாக பயணிப்பதற்கு பலர் தயங்கினர்.இதன் பின்னர்தான் எங்கள் மீது நம்பிக்கை வைத்த சுமார் 1200 பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத கோயில்களின் நலன்களில் மட்டும் கவணம் செலுத்துவோம் என்று முடிவெடுத்தோம்.
இவைகளுக்கு அப்பால் இவ்வளவு பலம் பொருந்திய அமைப்பாக இந்து சம்மேளனம் பணியாற்றுவது தெரிந்திருந்தும் நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரோ அல்லது கண்ணியா ஆலய நிர்வாகத்தினரோ உத்தியோகபூர்வமாக எம்மோடு தொடர்புகொள்ளவில்லை என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.இந்து சம்மேளனம் அதன் உருப்பினர்களிடம் கூட சந்தா வசூலிப்பதில்லை. மிகவும் நிதிநெருக்கடியுடன் எமது தனிப்பட்ட வளங்களை பயன்படுத்தியே இவ்வளவு தூரம் பயணித்தோம். அதேபோல் நாம் இது வரை யாருடைய வாக்குகளையும் பெற்றுக்கொண்டு பாராளுமன்றம் சென்று மக்களை ஏமாற்றியவர்கள் கிடையாது.நாம் கிழக்கில் மட்டுமல்ல எங்கு சென்றாலும் கடும் பாதுகாப்பு அச்சுருத்தல்களுக்கு மத்தியிலேயே பணியாற்றி வருகின்றோம்.
கடந்த ஏப்ரல் மாத குண்டுவெடிப்பின் பின் சிங்கள தலைவர்கள் முதற்கொண்டு அனைவரும் மதபயங்கரவாதத்திற்கெதிராக பொங்கியெழுந்தனர்.பின்னர் காணாமல் போயினர்.பதவியை இராஜிநாமா செய்த எல்லோருமே மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.இவர்களுக்கெதிராக எவரும் நீதிமன்றம் செல்லவில்லை.ஆனால்...,.ஒற்றை மனிதனாக இலங்கையிலேயே ஒரே ஒருவன் மட்டுமே ஹிஸ்புள்ளாவிற்கெதிராக வழக்கு தொடர்ந்துள்ளான்.அது வேறு யாருமல்லை...இந்த அருண்காந்த் மட்டுமே......சிங்களவனே செய்யாததை நான் செய்தேன்....ஏன்? எல்லாம்...என் இனத்திற்காக.. இந்த வழக்கு காரணமாக ஹிஸ்புல்லாவிற்கு மீண்டும் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அணைவரும் அறிவார்கள்... இவ்வளவு சிக்கலான விடயங்களை கையாண்டு வரும் எங்களிடமா கேள்விகேட்கின்றீர்கள்......இதே கேள்விகளை ஏன் விக்கியிடமோ சம்பந்தனிடமோ கேட்க முடியாது?உங்களுக்கே தெரியும் ....அவர்கள் அதற்கானவர்களில்லை என்று.தமிழ் அரசியல்வாதிகளை பொருத்தமட்டில் அவர்கள் பிரச்சினைகளை முன்கூட்டியே இனங்கண்டு அவற்றை தீர்ப்பதைவிட பிரச்சினை பெரிதாகி ஊடகங்களில் பிரபல்யம் அடைந்த பின்னர்தான் அதைப்பற்றி கவணமெடுப்பார்கள்.அப்படி செய்தால்தான் மக்கள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கு...பிரச்சினை பெரிதானால் அதைவைத்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம்....எழுச்சி உரை....அது...இது என்று பட்டையை கிளம்பலாம்..... உண்மை என்னவெனில் எல்லா பிரச்சினைகளையும் அவ்வாறு கையாள முடியாது.வடக்கில் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னால் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் தமது பெரும் அரசியல் பரப்பை கொண்டுள்ளனர்.?எனினும் ஒரு சிறு கோவில் பிரச்சினையை இராஜதந்திரமாக தீர்ப்பதற்கு வக்கில்லாமல் திரியும் இவர்களை நம்பியா 13வது அரசியல் யாப்பு,சமஷ்டி கட்டமைப்பு என்றெல்லாம் கணவு காண்கின்றீர்கள் தமிழ் மக்களே..,ஒரு கோயில் பிரச்சினை எமது இளைஞர்களை ஜனநாயகத்தின் மீதும் நீதிமன்ற நடவடிக்கைகளின் மீதும் நம்பிக்கை இழக்கச்செய்கின்றது என்றால் ஒருபக்கம் தேரர்களும் மறுபக்கம் இதை வெற்றிகரமாக தீர்த்துவைத்து எம்மவர்களை அவமானப்படாமல் காக்கத்தவரிய எமது அரசியல் தலைவர்களும்தான் அசம்பாவிதங்களுக்கு முழுப்பொருப்பையும் ஏற்க வேண்டும்.ஒரு வேளை இந்தப் பிரச்சினையில் என்னை இணைத்திருந்தால் நானே தேரரின் உடலை தமிழ் மக்களின் பெருந்துணையோடு தமிழ் மக்கள் கூறிய இடத்திலேயே தகணம் செய்திருப்பேன். இது இருபெரும் தேசிய இணங்களை மேலும் ஒற்றுமைப்படுத்தியிருக்கும்.
எது எவ்வாறெனினும் இக்கட்டான இந்த சூழ்நிலையில் தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் அறிவுபூர்வமாகவும் இராஜ தந்திரமாகவும் செயற்பட்டு தமது பிரச்சினைகளை கையாள வேண்டுகின்றேன்.அதன் ஊடாக வெற்றிகள் கிட்டலாம்.விக்கியாகட்டும் சம்பந்தனாகட்டும்....இந்த பிரச்சினைகளை எங்களால் தீர்க்க முடியாது...எங்களால் ஆர்பாட்டம் மட்டுமே செய்ய முடியும்...என்று தமது இயலாமையை ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டால் அடுத்த கணமே நாங்கள் களத்தில் இறங்கி விடயங்களை கையாள்வோம்........
எந்த ஒரு தாக்கத்திற்கும் சமனும் எதிரானதுமான தாக்கம் உண்டு என்பதை எல்லோரும் புரிந்து நடந்தால் நாடு அமைதியாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment