11 Sept 2019

இலங்கை நிர்வாவ சேவை நேற்றும் இன்றும் 10ம் திகதி சகல நிர்வாக உத்தியோகத்தர்களும் சுகயின விடுமுறை என அறிவித்து தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையில் இடுபடுவது என இலங்கை நிர்வாக சேவை சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

SHARE

இலங்கை நிர்வாவ சேவை நேற்றும் இன்றும் 10ம் திகதி சகல நிர்வாக உத்தியோகத்தர்களும் சுகயின விடுமுறை என அறிவித்து தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையில் இடுபடுவது என இலங்கை நிர்வாக சேவை சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். இன்று 11ம் திகதி அனைத்து சேவை உத்தியோகத்தர்களும் பொது நிர்வாக அமைச்சின் முன்றலில் எதிர்ப்பு செயற்பாட்டில் இடுபடுகின்றனர்.அரசாங்க அதிபர் மாவட்ட செயலாளர்கள் ,பிரதேச செயலாளர்கள் ,அமைச்சுக்களின் செயலாளர்கள்  ,ஆணைக்குழுக்களின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்ச்சி மாநகரசபையின் சேவையாற்றும் தமது சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இத்தொழில் சங்க நடவடிக்கையில் இடுபட்டு வந்தது அவதானிக்க முடிந்தது.

உள்நாட்டு அமைச்சர்; வஜிர அமையவர்த்தன அவர்களால் அண்மையில் பத்திரிகை செய்தி ஒன்றுக்கு வழங்கி இருந்த செய்தியில் ஊழல் மோசடிகளில் நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக  பெயர் குறிப்பிடப்படாமல் தெரிவித்து இருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்கப்படுகின்றது.

இலங்கை நிர்வாக சேவை உறுப்பினர்களின் இருநாள் வேலை புரக்கணிப்பு போராட்டத்தினால் இலங்கை புராகவும் நிர்வாக செயற்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுவது மக்கள் தங்களின் அன்றாட கடமைகளை நிறைவு செய்ய முடியாது அலுவலகங்களுக்கு வருகை தந்த திரும்பி செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.

கடந்த மாதம் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த அசாதாரண சம்பவங்களினால் மாவட்டத்தில் உயர் அதிகாரிகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் அவதூரான வார்த்தை பிரயோகம் மூலம் சேறு பூசும் நடவடிக்கையை முன்னேடுத்திருந்தமை தொடர்பாக கறுப்புப்பட்டி போராட்டம் ஆரம்பிப்பட இருந்த நிலையில் அமைச்சருக்கு எதிரான எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் 18.09.2019 புதன்கிழமை நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சங்க உறுப்பினர் மேலதிகார அரசாங்க அதிபர் ளு.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக சேவைகள் ஸ்தம்பதம் அடைந்த நிலையில் காணப்படுவதுடன் மக்கள் மிகுந்த அசோகரியத்துடன் பணிகளை முடித்துக்கொள்ளாத நிலையில் வீடு திரும்புவதை அவதானிக்க முடிந்தது.இவ்வாறான அசோகரியமான நிலைக்கு காரணமாக இருந்த போலி முகவரி மூலம் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புரம்பாக பரப்புரை செய்கின்றவர்களே இந்த மக்களின் அசோகரியத்திற்கு முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும்.







SHARE

Author: verified_user

0 Comments: