மட்டு மரியாள் தேவ ஆலய வருடாந்த கொடியிறக்க திருவிழா.
மட்டக்களப்பு மட்டு மரியாள் தேவவாலய வருடாந்த திருவிழா திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் பங்குதந்தை அன்னதாஸ் இமானுவேல் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர் .
ஆலய வருடாந்த திருவிழா கடந்த 07.08.2019 மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழா 9 நாட்காலங்களில் தினமும் மாலை செபமாலையும் மறைவுரைகளும் இடம்பெற்று திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது நேற்று மாலை அன்னையின் திருச்சுருவ பவணியும் தொடர்ந்து நற்கருணை வழிபாடுகளும் இ மறைவுரைகளும் இடம்பெற்றதுடன் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .
இன்று காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது திருப்பலியின் பின் அன்னையின் திருச்சுருவ பவணியும் அதனை தொடர்ந்து திருநாள் கொடியிறக்கப்பட்டு ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது .ஆலய திருவிழா திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு திருவிழா திருப்பலியை சிறப்பித்தனர் .
0 Comments:
Post a Comment