மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தலைவியும் அவரது மகள் மிதும் தாக்குதல்.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தலைவியும் எட்டுமாவட்ட மாவட்டங்களுக்குரிய வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உபதலைவியுமான அமலநாயகி அமல்ராஜ் அவர்களும் அவரது மகளும் கரடியனாறில் ஞாயிற்றுக்கிழமை மாலை (04) மரணச்சடங்கொன்றில் கலந்துகொண்டு விட்டு திரும்புகையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோதி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
காயமடைந்த இருவரும் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார், ஆயித்தியமலை பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளதுடன், மேலும் இருவரை தேடும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரனைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment