5 Aug 2019

தமிழ் மக்கள் தமிழ் அரசியற் கட்சிகளாலேயே ஏமாற்றப்படுவதுதான் மிகப்பெரிய சோகமாகும் -அருண் காந்த்

SHARE
கிழக்கு , வன்னி , மலையகம் ,தெற்கு ஆகிய பிராந்தியங்களில் செறிவாக வாழும் தமிழ் மக்களின் சக்தியை ஒருங்கிணைத்து முழுமையான தேசிய சக்தியொன்றை கட்டியெழுப்புவதனூடாக தமிழ் மக்களில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள வசதிகுறைந்த  மற்றும் நடுத்தர மக்களினதும் அரசியல் ,சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு விடயங்களில் மிகப்பெரும் சாதனைகளை ஒரு தேசிய கட்சி என்ற ரீதியில் மேற்கொள்வோம்."இவ்வாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனி யின்  (EPRLF) உயர்பீட  உறுப்பினரும் காரைத் தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான இராசையா செல்லையா அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் இலங்கை தேசிய ஜனநாயக கட்சியில்  (CNDP) இணையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அதன் தலைவர் நாரா.டி.அருண்காந்த் அவர்கள் பேசும்போது தெரிவித்தார்.கட்சியின் செயலாளர் நாயகம் சிவன் ரவிசங்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கட்சியின் அங்கத்துவ அட்டையை வழங்கிவைத்து தொடர்ந்தும் உரையாற்றிய அருண் காந்த் அவர்கள் தெரிவித்ததாவது .."தமிழ் மக்கள் தமிழ் அரசியற் கட்சிகளாலேயே ஏமாற்றப்படுவதுதான் மிகப்பெரிய சோகமாகும்.நடைமுறை சாத்தியமில்லாத கோரிக்கைகளையும் கற்பனைவாதங்களையும் தமிழ் மக்களின் தமிழ் உணர்வுகளையும்  கிளறிவிட்டு புரட்சி என்ற பெயரில் கனவுகளையும் குரோதங்களையும் விதைப்பதன் மூலம் எமது மக்களின் மீது முதுகுக்குப்பின் நின்றுகொண்டு ஒரு மாபெரும் உளவியல் யுத்தம் ஒன்றை அரசியல்வாதிகள் நடாத்தி வருகின்றனர்.இதற்கு ஒரு சிறு உதாரணம் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்.அரசாங்கத்தோடு பின்னிப்பிணைந்து செயற்பட்டுவரும் தமிழ் அரசியல் தலைவர்கள் மனம் வைத்தால் இருபத்து நான்கு மணித்தியாளங்களில் அரசியல் கைதிகளை பிணையிலேனும் விடுதலை செய்ய வைத்திருக்கலாம் ஆனால் எமக்குத் தெரியும்..அவர்கள் செய்யமாட்டார்கள் என்று.ஏன் என்றால் தமிழ் மக்களின் உணர்வுகளை கொதிநிலை யில் வைத்திருந்தால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறலாம்.இன்று தமிழ் மக்கள்  வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் திணறி வருகின்றனர்.பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது கலாச்சாரம், பண்பாடு என்பவற்றைத் துறந்து  மதம் மாறி, இனம்மாறி எம்மை விட்டு பிரிந்து சென்ற வண்ணமுள்ளனர்.இவைகள் அனைத்தும் தமிழ் தலைமைகளுக்கு நன்கு தெரியும்.இவ்வாறான சூழ்நிலையில்தான் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் காரைத் தீவு பிரதேச சபையின் தவிசாளருமான இராசையா செல்லையா அவர்கள் பொறுமையின் எல்லைக்கே சென்று விரக்தியடைந்த நிலையில் எமது கட்சியில் இணைந்துள்ளார்.இது ஒரு மாபெரும் திருப்புமுனை.கட்சி தொடங்கி ஒரே கிழமையில் பல மூத்த அரசியல் தலைவர்கள் எமது கட்சியில் இணைய தொடங்கிவிட்டனர்.இதனைப்பயன்படுத்தி தமிழ்மக்களின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்துவோம்.இராசையா செல்லையா அவர்கள் கிழக்கு மாகாணத்தின் காரைத் தீவில் பாரிய அளவில் பண்பாட்டு பணியாற்றியவர்.நீண்ட காலம் அரசியல் , சமூக, ஆன்மீக பணிகளில் தம்மை அர்ப்பணித்தவர்.அவரது எதிர்பார்ப்புக்களை இலங்கை தேசிய ஜனநாயக கட்சி நிச்சயமாக நிறைவேற்றும் என்றார்.

அதனைத் தொடர்ந்து  உரையாற்றிய இராசையா செல்லையா அவர்கள் கூறும்போது தெரிவித்ததாவது...."நான் எந்தவொரு அரசியல் பதவிக்காகவோ சலுகைகளை அனுபவிக்கவோ இங்கு வரவில்லை.நாரா.டி.அருண்காந்த் அவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு சத்தமின்றி பாரிய பணியாற்றியுள்ளார்.அவரது இராஜதந்திர நடவடிக்கைகள் எதுவுமே இதுவரை தோற்றதில்லை.கிழக்கு  மாகாணத்தில் சிற்றூழியர் நியமனம் முதல் முன்னால் ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம அவர்களை நியமித்தது வரை பல நடவடிக்கைகளில் நேரடியாக தொடர்புபட்டு பல வெற்றிகளை தமிழ்மக்களுக்கு பெற்றுத் தந்தவர்.நானும் பலமுறை ஊடக மாநாடுகளை நடாத்தி வடக்கு கிழக்கு தமிழ் தலைமைகள்  ஒற்றுமையுடன் ஒன்றுபடவேண்டும்  என்று வலியுறுத்தி வந்தேன்.எனினும் யாருமே இக்கோரிக்கை களை கண்டுகொள்ளவில்லை.எல்லோருமே சுயநலத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.கிழக்கு மாகாணம் நமது கண் முன்னே பரிபோவதை பார்த்துக்கொண்டு என்னால் சுரணையற்றவன் போல்  இருக்கமுடியாது.எனவேதான் உறுதியான தலைமைத்துவம் உள்ள ஒரு தேசிய கட்சியில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தமிழ்மக்களின் அரசியல் ,சமூக , பொருளாதார, பண்பாட்டு விடயங்களில் பாரிய அளவில் பங்காற்ற முடியும் என முடிவுசெய்தேன்  என்றார்.


ஊடக பிரிவு.
இலங்கை தேசிய ஜனநாயக கட்சி.
CNDP.

SHARE

Author: verified_user

0 Comments: