6 Aug 2019

எமது நடவடிக்கைகளையும் மீறி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வரத்தான் செய்கின்றன - வனஜீவராசிகள் பாதுகாப்புபிரிவின சுற்றுவட்டப் பொறுப்பாளர் அப்துல் ஹலீம்.

SHARE
எமது நடவடிக்கைகளையும் மீறி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வரத்தான் செய்கின்றன - வனஜீவராசிகள் பாதுகாப்புபிரிவின சுற்றுவட்டப் பொறுப்பாளர் அப்துல் ஹலீம். 
ஆடு மாடுகள் என்றால் எம்மால் இலகுவில் கட்டுப்படுத்தலாம், எமது நடவடிக்கைகளையும் மீறி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வரத்தான் செய்கின்றன. போரதீவுப் பற்றுப்பிரதேசத்தில் காட்டுயானைகள் வந்து தங்கி நிற்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தாந்தாமலை, உன்னிச்சை, மற்றும் அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளுடாகத்தான் யானைகள் இப்பகுதிக்கு வருகின்றன. காரணம் இப்பகுதியில் பற்றைக் காடுகள் உள்ளன, யானைகளுக்குரிய உணவு உள்ளது, குறிப்பாக இப்பகுதியில் அமைந்துள் தளவாய்க் காடு எனும் பகுதி மேச்சல்தரைக்குரியதாகும். கடந்த யுத்த காலத்தில் மக்கள் இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து சென்றதனால் அந்த மேச்சல்தரைப்பகுதி பற்றைகள் சூழ்ந்து தற்போது காடுகளாக வளர்ந்து விட்டன. இந்த மேச்சல்தரைப் பகுதியை சம்மந்தப்பட்வர்கள் கவனிதிருந்தால் தற்போது அதனுள் யானைகள் தங்கிநிற்காது. தற்போது அதனுள் ஆடுமாடுகள் மேய்க்க முடியாமல் யானைகள்தான் வந்து கிடக்கின்றன.  

என வனஜீவராசிகள் பாதுகாப்புபிரிவின் போரதீவுப்பற்றுப்பிரதேச  சுற்றுவட்டப் பொறுப்பாளர் அப்துல் ஹலீம் தெரிவித்தார். மட்டக்களப்பு போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் தொடற்சியாக கட்டுயானைகளின் அட்டகாசங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்விடையம் தொடர்பில் திங்கட்கிழமை (05)  அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிகையில்….

போரதீவுப்பற்குப் பிரதேசத்தை அண்டிய பற்றைக் காடுகளுக்குள் 25 தொடக்கம் 30 காட்டுயானைகள் தங்கி நிற்கின்றன. ஒவ்வாரு ஊருக்கு என்று யானைவேலிகள் அமைப்பதில்லை பொதுவாக காடுகள் அண்டிய எல்லைப்புறத்தில்தான் யானைப்பாதுகாப்பு வேலிகள் அமைப்பதாகும். மியாங்கலப் பகுதியிலிருந்து கச்சக்கொடிச்சுவாமிலை, தொடக்கம் உன்னிச்சை வரைக்கும், யானைவேலி அமைக்கக்கட்டுள்ளது. இருந்தும் அவை 10 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட வேலிகள்தான்  அவற்றின் கட்டைகள் யானைகளால் உடைக்கப்பட்டுள்ளன, யானைகள் அவற்றை உடைக்காத வண்ணம் தற்போதைக்கு நவீனமயப்படுத்த வேண்டியுள்ளது. இவற்றுக்கு மேலதிக மின்சார உற்பத்திகளையும் அமைக்க வேண்டியுள்ளது. இவற்றுக்கு மேலாக போரதீவுப்பற்றுக்கு மாத்திரம் யானை வேலை அமைப்பதற்கு ஒரு திட்டவரைபு அனுப்பியுள்ளோம் அதன் அனுமதி கிடைத்தால் 27 கிலோ மீற்றருக்கு புதிதாக மேலும் யானை வேலி அமைக்கப்படும். 

இனிவரும் காலத்தில் யானை வேலிகளைப் பராமரிப்பதற்காகவேண்டி விசேட படை ஒன்றை அரசாங்கம் அமைக்கவுள்ளது. அவர்களின் செயற்பாடு இன்னும் 2 மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அவர்கள் இரவு வேளைகளிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ன, அடுத்து இருக்கின்ற யானைவேலிகள் புணரமைப்பு செய்யப்படவுள்ளன, இவற்றுக்குரிய திட்டவரைபுகளை நாம் அனுப்பியுள்ளோம். மிகவிரைவில் இவற்றுக்குரி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். இவை அமுலுக்கு வந்தால் மக்கள் மத்தியில் பெரும்பாலும் யானைத்தாக்கம் குறைக்கலாம் என நம்புகின்றேன். 

மேலும் இவற்றுக்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் இப்பகுதியிலுள்ள தனியார், மற்றும் பொது அமைப்புக்களுக்குச் சொந்தமான இடங்களிலும், வாய்க்கால் ஓரங்களாகவும், உள்ள பற்றறைக்காடுகளை உரியவர்கள் அகற்றவேண்டும். இவ்வாறு அகற்றினாலும் காட்டுயானைகள் தங்கி நிற்பதைத் தடுக்கலாம். போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 43 கிராம சேவை பிரிவுகள் உள்ளன அவற்றுள் 23 கிராம சேவைப் பிரிவுகளில் தெடர்ந்து காட்டு யானைகளின் பிரச்சனைகள் இருந்து வருகின்றன. நாங்கள் 7 உத்தியொகஸ்த்தர்களை வைத்துக் கொண்டு இத்தனை கிராமங்களையும் கவனிப்தென்பது மிகவும் கடினமாகவுள்ளது. என வனஜீவராசிகள் பாதுகாப்பு போரதீவுப்பற்றுப்பிரதேச  சுற்றுவட்டப் பொறுப்பாளர் அப்துல் ஹலீம் மேலும் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: