19 Aug 2019

பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE
பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனை விசாரணை செய் அல்லது விடுதலை செய் 13வது திருத்தச்சட்டத்தை நீக்கு கிழக்கின் அபிவிருத்தி நாயகனை விடுதலை செய் கிழக்கின் அடிமை விலங்கை உடைக்க பயங்கர வாதச் சட்டத்தை நீக்கு படுவான்கரை தனிக் கல்வி வலயத்தை உருவாக்கிய தலைவனை விடுதலைசெய் என வலியுறுத்தி அவரது பிறந்த தினத்தில் மட்டக்களப்ப காந்திப்பூங்கா அருகில் விடுதலை வலியுத்தி இன்று அவரது கட்சியின் ஆதரவாளர்களால் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் கட்சியின் பிரதேச சபை ஊறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அரசியல் பிரமுகர்கள் கட்சியின் மகளீர் அணி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் பிள்ளையானின் விடுதலையை கோரி இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.பேரணி இறுதியில் கட்சி அலுவலகத்தில் செயலாளர் தலைமையில் கிழக்கின் நாயகனின் ஆதரவாளர்களோடிணைந்த சிறப்பு பிறந்த நாள் நிகழவுக்கூட்டமும் இடம்பெற்றது.



SHARE

Author: verified_user

0 Comments: