5 Aug 2019

கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தின் மட்டக்களப்பு கிளைக்கான தலைவராக சங்கரப்பிள்ளை-சசிகரன் நியமிக்கப்பட்டார்.

SHARE
கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தின் மட்டக்களப்பு கிளைக்கான தலைவராக சங்கரப்பிள்ளை-சசிகரன் நியமிக்கப்பட்டார்.
இவர் கடந்த 3.8.2019 திகதியன்று கொழும்பில் வோட்டெச் ஹோட்டலில் இடம்பெற்ற 2019/2020 ஆண்டுக்கான கிளைகளின் அங்குரார்ப்பணமும்,புதிய நிருவாக அங்கத்தவர் நியமனம் செய்யும் நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் இலங்கைக்கான ஆளுநரான லயன்.விணற ஜெயவர்த்தன அவர்களினால் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவராக இருந்து கல்லூரியின் பாரிய முன்னேற்றங்களில் கல்லூரிக்கு பெருமை சேர்த்தவராவார்.

இவர் தற்போது முன்பள்ளி பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளராக கடமையை புரிந்து வருவதுடன் பணியகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கின்றார். 




SHARE

Author: verified_user

0 Comments: