மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலய மஹோற்சவம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பெருநிலத்தில் திருப்பழுகாமத்தில் வீற்றிருந்து இஷ்ட சித்திகளை வாரிவழங்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீ மாவேற்குடாப்பிள்ளையார் ஆலயத்தின் துவஜாரோகண மஹோற்சவ பெருவிழா எதிர்வரும் 23.08.2019 ம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாவுள்ளது.
கிராம தரிசனம், திருவேட்டை திருவிழா, மாம்பழத்திருவிழா, முத்துச்சப்புற திருவிழா என்பவற்றுடன் பத்து நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று 02.09.2019ம் திகதி ஆவணி சதுர்த்தியில் பஞ்சமுக விநாயகன் தேரிலே வலம் வரும் இரதோற்சவம் இம்பெற உள்ளதுடன், 03.09.2019ம் திகதி தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்
0 Comments:
Post a Comment