கோழி ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறி டிப்பர் வாகனத்துடன் மோததியதில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு மேலும் ஒருவர் படுகாயம்.
கோழிகளை கோழி இறைச்சிக் கடைகளுக்கு விநியோகிப்பதற்காக ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது கோழிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறி டிப்பர் வாகனத்துடன் மோதியதில் அந்த கோழி ஏற்றிச் சென்ற வாகனத்தில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை 11.08.2019 அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஏறாவூர் 01, கலைமகள் பாடசலை வீதியை அண்டி வசிக்கும் லொறிச் சாரதியான பதுறுதீன் ஹில்மி ஹசன் (வயது 25) என்பவரும் ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் கிராமம் ஸஹாப்தீன் வீதியை அண்டி வசிக்கும் தாவூத் றிழ்வான் (வயது 30) என்பவருமே மரணித்துள்ளவர்களாகும். பதுறுதீன் றிஸ்வின் (வயது 21) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை இவர்கள் ஏறாவூரில் இருந்து கோழிகளை ஏற்றிச் சென்று கொண்டிருக்கும்போது மட்டக்களப்பு - கல்முனை வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா எனுமிடத்தில் விபத்து நேர்ந்துள்ளது.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் சில்லுகள் வெடித்து காற்றுப் பிரிந்தபோது அந்த டிப்பர் சடுதியாகத் தடுமாறியுள்ளது.
அவ்வேளையில் பின்னால் சென்றுகொண்டிருந்த கோழிகளை ஏற்றிய வாகனம் டிப்பர் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்றதை அறிந்த அவ்விடத்தில் வசித்த பொதுமக்கள் விரைந்து சென்று உதவியளித்து விபத்தில் சிக்கியரவர்களை மீட்டபோதும் இருவர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளனர்.
இச்சம்பவம்பற்றி காத்தான்குடி பொலிஸார் மேலதிக விhசரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment