திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய இறுவட்டு வெளியீட்டு விழா-2019
திருவருள்மிகு திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய இறுவட்டு விழா 15.08.2019 ஆந் திகதி வியாழக்கிழமை வருடாந்த தீர்த்தோற்சவ நாளன்று மணிக்கு ஆலயத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ் இறுவட்டானது முருகப்பெருமானது மகிமையைப்பற்றி மதிப்பிற்குரிய கவிஞர் கலாபூசனம் கா.சிவலிங்கம் அவர்களின் உபயமாக எழுதப்பட்டு, இசயமைப்பாளர் இன்னிசைத்தென்றல் அ.செல்வகுமார் அவர்களின் உபயமாக சையமைக்கப்பட்டு ஆச்சிரம இசையமுதம்;; இறுவட்டு ஆலய பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டது.
கவிஞர் கலாபூசணம் கா.சிவலிங்கம் அவர்கள் 31.08.1943 ஆம் ஆண்டு பாலமீன்மடுவில் பிறந்து தனது 15 வது வயதில் கவிதை எழுதும் ஆற்றலை கொண்டிருந்த இவர் 19 வது வயதில் நாடகத்துறையில் நாட்டம் கொண்டு கலைத்துறையை முன்னெடுத்திருந்தார்.
அவ்வரிசையில் நாடகம், கவிதை, சிறுகதை, பாடல், போன்றவற்றில் தனது கலைப்பணியை தொடர்ந்து சேவையாற்றிய இவருக்கு பல விருதுகள் கிடைத்தன. அந்தவகையில் கலாபூசணம் விருது நாடகத்திற்கும், கிழக்கு மாகாண சபையினால் வித்தகர் விருதும், தேனச்சுடர் விருது, கலைமாமணி விருது என பல தரப்பட்ட விருதுகளினுடாக கௌரவிப்பினை பெற்ற இவர் 2014 ஆம் ஆண்டில் திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தைப்பற்றிய கும்மிப்பாடலை வெளியிட்டார்.
சடையப்பர் சுவாமியும் திராய்மடு திருத்தலமும் என்ற நூலும் இவரினால் எழுதப்பட்டது.2007 ஆம் ஆண்டு முகம் காட்டும் முழுநிலா என்ற கவிதை தொகுப்பும் இவரால் வெளியிடப்பட்டது.
இவர் வானொலி,தொலைக்காட்சி, போன்ற ஊடகங்களில் நேர்காணல் நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு திருத்தலங்களைப்பற்றி பாடல்கள் எழுதி வெளியிட்டுள்ளமையும் இவருடைய கலைப்பணிக்கு பெருமை சேர்க்கின்றது எனலாம்.
0 Comments:
Post a Comment